
ரனதுங்கா
இந்திய ரசிகர்களை போன்று நடந்து கொள்ள வேண்டாம் என்று தன் நாட்டு ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், அமைச்சருமான அர்ஜுனா ரனதுங்கா.

கலாச்சாரம்
இலங்கைக்கு என்று அருமையான வரலாறு, கலாச்சாரம் உள்ளது. நம் கலாச்சாரம் மற்றும் வரலாறு படி நீங்கள் நடந்து கொண்டது ஏற்புடையது அல்ல. அதனால் இந்திய ரசிகர்களை போன்று நடந்து கொள்ளாதீர்கள் என்று ரனதுங்கா தெரிவித்துள்ளாராம்.

வேண்டாம்
இந்தியாவுக்கு எதிரான போட்டியின்போது நடந்தது போன்று இனிமேல் நடக்கக் கூடாது. இலங்கை மக்களுக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். அதனால் நாம் ஒரு போட்டியில் தோற்றால் அவர்கள் கவலை அடைவார்கள் என்கிறார் ரனதுங்கா.

தியாகம்
நாம் கிரிக்கெட்டுக்காக பல தியாகங்கள் செய்துள்ளோம். பலவற்றை இழந்து அந்த தியாகங்களை செய்துள்ளோம். நம் அணி வீரர்கள் அனைவரும் மனஅழுத்தத்தில் உள்ளனர் என்று ரன்துங்கா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











