Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூப்பர்மேன் வேலை எல்லாம் மூட்டை கட்டி வைக்கணும்… புரியுதா? அணியினருக்கு அட்வைஸ் சொன்ன அந்த கேப்டன்

கேன்பரா:உலக கோப்பை தொடரில் சூப்பர்மேன் போன்ற செயல்பாடுகளை தென் ஆப்ரிக்க அணியினர் மூட்டை கட்டி வைத்துக் கொள்ளுமாறு கேப்டன் டு பிளெசிஸ் அறிவுறுத்தி இருக்கிறார்.

வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது, வழக்கத்துக்கு மாறாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ரவுண்டு ராபின் முறையில் நடைபெறும் இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியை சந்திக்க வேண்டும்.

புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். உலக கோப்பை சாம்பியன்கள் என்ற வரிசையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகளுக்கு வாய்ப்புகள் என்று முன்னாள் ஜாம்பவான்கள் கணித்துள்ளனர்.

டு பிளெசிஸ் அட்வைஸ்

டு பிளெசிஸ் அட்வைஸ்

இந்நிலையில் போட்டி தொடர்பாக, தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் டு பிளெசிஸ் பேசியிருக்கும் பேச்சுகள் தான் தற்போதைய கிரிக்கெட் உலகின் வைரல். உலக கோப்பையில் சூப்பர்மேன் செயல்களை செய்யக் கூடாது என்று அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.

புதிய அணுகுமுறை அவசியம்

புதிய அணுகுமுறை அவசியம்

அவர் கூறியிருப்பதாவது: இந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாம் வழக்கமாக செய்யும் எதையும் செய்யக் கூடாது. புதிய அணுகுமுறை தான் நமக்கு அவசியம் தேவை. அதற்கு முன்பாக நம்மிடம் இருந்த அணுகுமுறையில் ஒரு பற்றாக்குறை உள்ளது.

ஜாலியாக விளையாட வேண்டும்

ஜாலியாக விளையாட வேண்டும்

அதற்கு காரணம் ஒரு அழுத்தத்துடன் களத்தில் போட்டியை எதிர்கொள்வது தான். அந்த பயத்தில் இருந்து வெளியில் வந்து விளையாட வேண்டியுள்ளது. அதற்கு நாம் நம் சூப்பர்மேன் தனத்தையெல்லாம் விட்டுவிட்டு விளையாட்டில் முழு கவனம் செலுத்தி, அதே சமயம் ஜாலியாக விளையாட வேண்டும் என்றார்.

வைரல் அட்வைஸ்

வைரல் அட்வைஸ்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரை எதிர்கொள்ள பல வழி முறைகளையும், ஆலோசனைகளையும் அந்தந்த அணியின் கேப்டன்கள் கையாள்கின்றனர். அந்த வகையில், தென் ஆப்ரிக்க கேப்டன் டு பிளெசிஸ் தனது வீரர்களுக்கு வழங்கியிருக்கும் அறிவுரை இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக 4 முறை உலக கோப்பையில் அரையிறுதி வரை சென்று தோல்வியுடன் திரும்பி இருக்கிறது தென் ஆப்ரிக்கா.

Story first published: Monday, May 20, 2019, 16:17 [IST]
Other articles published on May 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+