For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்லை வச்சுகிட்டு எடை போடாதீங்க.. அவரு திறமை, அவருக்கே தெரியாது.. கோலிக்கு முன்னாள் கேப்டன் ஆதரவு

Recommended Video

விராட் கோலிக்கு முன்னாள் கேப்டன் ஆதரவு

பனாஜி: ஐபிஎல் போட்டிகளை அடிப்படையாக கொண்டு, விராட் கோலியின் திறமையை எடை போட வேண்டாம் என்று முன்னாள் வீரர் திலிப் வெங்சர்க்கார் கூறியிருக்கிறார்.

இந்த ஐபிஎல் தொடரில் கடுமையான விமர்சனங்கள், கேலிகளுக்கு ஆளாகி வரும் ஒரே அணி என்றால்... அது சாட்ஷாத் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தான். இது வரை அந்த அணி விளையாடிய போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.

விளையாடி அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து.. என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி இருக்கிறது. புள்ளி பட்டியலிலும் கடைசி இடத்தில் இருக்கிறது.

கையில் வலியோடு... அவர் ஆடினாரு பாருங்க.. அதுதாங்க சூப்பர் ஆட்டம்... அவரை பாராட்டும் இவர் கையில் வலியோடு... அவர் ஆடினாரு பாருங்க.. அதுதாங்க சூப்பர் ஆட்டம்... அவரை பாராட்டும் இவர்

சாம்பியன் கனவு

சாம்பியன் கனவு

அடுத்து வரக்கூடிய போட்டிகளில் வென்றாலும்... பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை. கிட்டத்தட்ட ஐபிஎல் சாம்பியன் கனவு தகர்க்கப்பட்டு விட்டது என்றே சொல்லலாம்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

தொடர் தோல்வியால்... கோலியின் கேப்டன்சி மீதும் முன் எப்போதும் இல்லாத விமர்சனங்கள் வந்து விழுந்துள்ளன. அப்பரண்டிஸ் கேப்டன் என்ற பெயரும் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

கோலி மீது அதிருப்தி

கோலி மீது அதிருப்தி

இந் நிலையில் கோலியின் மீதான தொடர் விமர்சனங்களால் அதிருப்தியடைந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனான திலிப் வெங்சர்க்கார் கோபம் அடைந்துள்ளார். ஐபிஎல் தொடரை வைத்து எந்த ஒரு வீரரையும் எடை போடக்கூடாது என்று அவர் கூறியிருக்கிறார்.

தலைசிறந்தவர்

தலைசிறந்தவர்

அவர் மேலும் கூறியதாவது: விராட் கோலி... அருமையான பார்மில் இருக்கிறார். கேப்டனாக, தலைசிறந்த வீரர்களில் அவரும் ஒருவர். அவர் மீது நம்பிக்கை வையுங்கள்.

பந்துவீச்சு அபாரம்

பந்துவீச்சு அபாரம்

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடியவர். உலக கோப்பை தொடரில் அரையிறுதியில் நுழையும் அணிகளில் இந்தியாவும் ஒன்று. அணியின் பந்துவீச்சு அருமையாக இருக்கிறது.

கவலை வேண்டாம்

கவலை வேண்டாம்

கடைசி 10 ஓவர்களை எதிர்கொள்ளும் போது இந்தியா தடுமாறி தோல்வியை சந்திக்கிறது. தற்போது பும்ரா மற்றும் பலர் இருப்பதால் அதை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

பொறுப்பு வேண்டும்

பொறுப்பு வேண்டும்

கோலி, ரோகித் அருமையான பார்மில் இருக்கின்றனர். ஆனால்.. எல்லா நேரங்களிலும் இந்த 2 பேட்ஸ்மென்களை நம்பி இருக்க முடியாது. மற்றவர்களும் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும்.

எடை போடுவது தவறு

எடை போடுவது தவறு

4ம் வரிசையில் யாரை இறக்குவது என்பதில் பல யோசனைகள் இருக்கின்றன. ராகுல், ரகானே இதற்கு பொருத்தமானவர்கள். அவர்களை போன்றே மயங்க் அகர்வாலும் இருக்கிறார். யாராக இருந்தாலும் ஐபிஎல் போட்டிகளை வைத்து எடை போடுவது தவறு.

Story first published: Tuesday, April 9, 2019, 12:11 [IST]
Other articles published on Apr 9, 2019
English summary
Don't judge Virat Kohli by IPL form says former captain Dilip Vengsarkar.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X