அந்த ரெண்டு பேட்ஸ்மென் எனக்கு ரொம்ப தொல்லை கொடுத்தாங்க…! இந்திய இளம் வீரரின் ஓபன் டாக்
மும்பை: டேவிட் வார்னர் மற்றும் ஆண்ட்ரே ரசல் ஆகிய இருவருக்கும் எப்படி பந்து வீசுவது என்பது தெரியாமல் சிரமப்பட்டதாக இந்திய இளம் பவுலர் புவனேஷ்குமார் கூறியுள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா வரும் 30ம் தேதி தொடங்க உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் தயாராகி விட்டன. இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் வீரர்கள் ஆரூடம் சொல்லியிருக்கின்றனர்.

இந்திய அணியை பொறுத்தவரை பந்துவீச்சு தற்போது சிறப்பாக இருக்கிறது. பும்ரா, புவனேஷ்வர் குமார், சமி, குல்தீப், சாஹல் என அசத்தலான பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். உலக கோப்பையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த இருப்பது பும்ராவின் பந்துவீச்சு என அனைவரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் சிறந்த ஸ்விங் பவுலரான புவனேஷ்வர் குமார் இணைய தளம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: டேவிட் வார்னர் மற்றும் ரசல் ஆகிய இருவருக்கும் பந்துவீசுவது என்பது எப்போதும் எனக்கு கடினம். அவர்களுக்காக ஒவ்வொரு பவுலரும் முழு திறமையையும் பயன்படுத்த வேண்டும் என்றார்.
புவனேஷ்குமார் கூறிய வார்னரும், ரசலும் அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் அற்புதமாக ஆடி ரன்களை குவித்தனர். வார்னர் 692 ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியை தட்டிச்சென்றார். ரசலோ, கொல்கத்தா அணிக்காக விளையாடி 200க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டை வைத்திருந்தார்.


Click it and Unblock the Notifications