பந்து வீச்சாளர்களுக்கு வாயில் வைத்து ஊட்டி விடவா முடியும்... டோணி ஆவேசம்
மொஹாலி: 3வது ஒரு நாள் போட்டியில் இஷாந்த் சர்மாவின் மோசமான பந்து வீச்சால் இந்தியா தோல்வியடைந்தாதால் பெரும் எரிச்சலான கேப்டன் டோணி, இந்திய பந்து வீச்சாளர்களை குறிப்பாக வேகப் பந்து வீச்சாளர்களை கடுமையாக சாடி விட்டார்.
போட்டி முடிவில் செய்தியாளர்களிடம் பேசியபோது தனது கோபத்தை மறைமுகமாக வெளிக்காட்டினார் டோணி.
வழக்கமாக வெற்றிகளையும், தோல்விகளையும் ஒரே மாதிரி எடுத்துக் கொள்ளும் கேப்டன் டோணி, நமது பந்து வீச்சாளர்களின் சொதப்பலால் நேற்று தனது முகத்தில் அதிருப்தியைக் காட்ட நேரிட்டு விட்டது.

பெரும் ஏமாற்றம்
டோணி கூறுகையில், கடைசி ஓவர்கள் நமக்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்து விட்டது. அதுதான் கவலைக்குரியதாக ஆரம்பத்திலிருந்தே இருந்தது. நேற்று மோலும் மோசமடைந்து விட்டது.

பனியால் என்ன பிரச்சினை
நேற்று பனி இருந்தது. என்றாலும், கடைசிப் போட்டியில் இருந்தது போல அதிகம் இல்லை.

நீங்கதான் சரியா பந்து வீசனும்
பந்து வீச்சாளர்கள் பந்து வீச வரும்போது சிந்தனையுடனும், திட்டத்துடனும் வர வேண்டும். தங்களது பலத்தை உணர்ந்து பந்து வீச வேண்டும்.

வாயில் வைத்தா ஊட்டி விட முடியும்
இது சர்வதேசப் போட்டி. எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஸ்பூனில் வைத்து வாயில் ஊட்டி விடத் தேவையில்லை. திட்டமிட்டு அவர்கள் செயல்பட்டிருக்க வேண்டும் என்றார் டோணி.

ஜடேஜா பரவாயில்லை
நடுக்கள பந்து வீச்சாளர்கள் பரவாயில்லை. குறிப்பாக ஜடேஜா நன்றாக வீசினார். அதேசமயம், பகுதி நேர பந்து வீச்சாளர்களும் சற்று உதவிகரமாக இருந்திருக்கலாம்.

நன்றாக செய்திருக்க முடியும்
மொஹாலி பிட்ச்சில் நாம் சிறப்பாக செயல்பக் கூடியவர்கள். இந்தப் போட்டியிலும் நாம் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்கலாம். 300 ரன்களை நாம் எட்ட முடிந்ததே அதிர்ஷ்டம்தான். நாம் சுதாரித்து ஆடியிருக்காவிட்டால் 250 ரன்களைக் கூட எட்டியிருக்க முடியாது என்றார் டோணி.


Click it and Unblock the Notifications