விஜய் மல்லையா அணிக்கு விளையாடாதீங்க: யுவராஜ் சிங்கிற்கு கடிதம் எழுதிய கிங்பிஷர் ஊழியர்கள்
மும்பை: எங்களுக்கு ஒன்றை ஆண்டுகளாக சம்பளம் வழங்காத விஜய் மல்லையாவின் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு விளையாட வேண்டாம் என்று கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் தங்களுக்கு அளிக்க வேண்டிய ஒன்றரை ஆண்டு கால சம்பள பாக்கியை கேட்டு போராடி வருகின்றனர்.
இந்நிலையில் அண்மையில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் உரிமையாளர் விஜய் மல்லையா கலந்து கொண்டு தனது ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு வீரர்களை கோடிக் கணக்கில் பணம் கொடுத்து எடுத்துள்ளார்.

ரூ.14 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு யுவராஜ் சிங்கை ரூ.14 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளனர்.

ஊழியர்கள் கடிதம்
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் யுவராஜ் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், மல்லையாவின் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாட வேண்டாம் என்று அவர்கள் யுவராஜை கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஐ.பி.எல்.
தங்களுக்கு சம்பள பாக்கியை கொடுக்க பணம் இல்லை என்று கூறும் விஜய் மல்லையா ஐ.பி.எல்., பார்முலா ஒன், காலண்டர்களுக்கு கோடிக் கணக்கில் செலவு செய்கிறார் என்று ஊழியர்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

15,000 பேர்
உங்களை ஏலத்தில் எடுக்க பயன்படுத்தப்பட்ட ரூ.14 கோடியில் 15,000 ஊழியர்கள் வயிராற சாப்பிட முடியும் என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ்
சம்பள பாக்கியை கேட்டு ஊழியர்கள் போராட்டம் நடத்தியதையடுத்து கிங்பிஷர் ஏர்லைன்ஸ் கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது சேவையை நிறுத்தியது. மேலும் அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

எவ்வளவு பாக்கி?
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்களுக்கு 18 மாத சம்பள பாக்கி வைத்துள்ளார் விஜய் மல்லையா. அவர் 2,800க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ரூ.250 கோடி சம்பள பாக்கியை அளிக்க வேண்டி உள்ளது.


Click it and Unblock the Notifications