Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அரசியல் சாயம் பூச வேண்டாம்.. பொங்கி எழுந்த அஸ்வின்.. அடேங்கப்பா இவ்வளவு கோபமா? என்னாச்சு

சென்னை: தமிழக வீரர் அஸ்வின் டிவிட்டரில் வரிசையாக செய்த மூன்று டிவிட்கள் பெரிய அளவில் சர்ச்சையையும் , விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அதிரடியாக வெற்றிபெற்றுள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு அஸ்வின் 7 விக்கெட்டுகள் முக்கிய காரணமாக இருந்தது.

இந்த போட்டியில் 7 விக்கெட் எடுத்ததன் மூலம் அஸ்வின் சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சர்வதேச அளவில் ஸ்பின் ஜாம்பவானாக அஸ்வின் உருவெடுத்துள்ளார்.

சாதனை

சாதனை

அஸ்வின் இவ்வளவு பெரிய சாதனை செய்த நிலையிலும் கூட யுவராஜ் சிங் அஸ்வினை மறைமுகமாக விமர்சனம் செய்து இருந்தார்.இந்திய அணியின் ஸ்பின் பவுலர்களை மறைமுகமாக கிண்டல் செய்யும் விதமாக யுவராஜ் சிங் டிவிட் செய்து இருந்தார். அதில், இந்த டெஸ்ட் போட்டி இரண்டு நாளில் முடிந்துவிட்டது. இது நல்ல டெஸ்ட் போட்டியா என்ற சந்தேகம் உள்ளது.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

ஹர்பஜன், அணில் கும்ப்ளே இந்த பிட்சில் பவுலிங் செய்திருந்தால் அவர்கள் 1000 அல்லது 800 விக்கெட்டுகளை எடுத்து இருப்பார்கள். இருந்தாலும் நன்றாக பவுலிங் செய்த அக்சர், அஸ்வின், இஷாந்த் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் என்று யுவராஜ் டிவிட் செய்துள்ளார்.

அஸ்வின்

அஸ்வின்

இந்த நிலையில் யுவராஜ் சிங்கின் டிவிட்டிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அஸ்வின் மறைமுகமாக டிவிட் செய்து இருந்தார். ஆனால் அஸ்வின் தனது டிவிட்டில் நேராக எந்த கருத்தையும் சொல்லாமல் மறைமுகமாக பேசினார். கருத்துக்களை எப்படி திணிக்கிறார்கள், எப்படி இன்னொருவரின் கருத்தை ஒருவர் மீது கடுமையாக திணிக்கிறார்கள் என்று அஸ்வின் டிவிட் செய்து இருக்கிறார்.

மூன்று

மூன்று

வரிசையாக மூன்று டிவிட்களில் அஸ்வின் மார்க்கெட்டிங் குறித்தும், மக்களின் கருத்துக்கள் எந்த அளவிற்கு அழுத்தம் கொடுக்கும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். அஸ்வின் செய்த இந்த டிவிட்கள் எதுவும் புரியவில்லை என்று பலர் குறிப்பிட்டு இருந்தனர். இவர் என்ன பேசுகிறார் என்றே புரியவில்லை என்று பலர் குறிப்பிட்டு இருந்தனர்.

டிவிட்

டிவிட்

இன்னொரு பக்கம் இது யுவராஜ் சிங்கிற்கு கொடுத்த பதிலடி என்றும் பலர் குறிப்பிட்டு இருந்தனர். இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்று அஸ்வினின் இந்த டிவிட் விவசாயிகள் போராட்டம் பற்றியது. விவசாயிகள் போராட்டத்திற்கு எதிராக கிரிக்கெட் வீரர்கள் பேசியதை அஸ்வின் தாக்கி இருக்கிறார் என்று செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டு இருந்தது.

செம்ம பதிலடி

இந்த நிலையில் இதற்கு அஸ்வின் கொடுத்த பதிலடியில், என்னுடைய டிவிட்டிற்கு புதிய அர்த்தம் கொடுக்க வேண்டும், அரசியலாக்க வேண்டும் என்றெல்லாம் யாரும் நினைக்க வேண்டாம். என்னுடைய தொழில் கிரிக்கெட். நான் செய்த டிவிட்டும் கிரிக்கெட்டை பற்றியதுதான். என்னுடைய டிவிட்டிற்கு புதிய சாயம் பூச முயல வேண்டாம், என்று அஸ்வின் டிவிட் செய்துள்ளார்.

Story first published: Saturday, February 27, 2021, 9:34 [IST]
Other articles published on Feb 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+