For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டோணியே இருக்கட்டும்... கோஹ்லி தலையை உருட்டாதீங்கப்பா.. 'பெரிய தல' கபில்!

கோலாலம்பூர்: ஒரு நாள் போட்டிகளில் சிறந்த முறையில் முடிப்பதில் டோணிதான் கில்லாடி. எனவே அவரே தற்சமயம் கேப்டனாக தொடரலாம். கோஹ்லியை இப்போதைக்கு விட்டு விடுங்கள், கேப்டனாக்க அவசரம் காட்ட வேண்டாம் என்று கபில் தேவ் கூறியுள்ளார்.

கோலாலம்பூர் வந்த கபில் தேவ் அங்கு கோஹ்லியை பயங்கரமாக புகழ்ந்து பேசியிருந்தார். அதே தொணியில், உடனடியாக கேப்டன் டோணியையும் புகழ்ந்துள்ளார் அவர்.

Don't rush Kohli into captaincy, let Dhoni continue: Kapil Dev

இதுகுறித்து அவர் கூறுகையில், கோஹ்லியை கேப்டனாக்க அவசரம் காட்டத் தேவையில்லை என்பது எனது கருத்து. காரணம் ஒரு நாள் போட்டிகளை வெற்றிகரமாக முடிப்பதில் கேப்டன் டோணிதான் சிறந்தவர். அவரே தற்போதைக்கு மூன்று விதமான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக நீடிக்கலாம்.

அவரை நீக்குவது என்ற பேச்சுக்கே தற்போது இடமில்லை. தனது பணியை அவர் சிறப்பாகவே செய்து வருகிறார்.

டோணியே 2015 உலகக் கோப்பைப் போட்டிக்கும் கேப்டனாக தொடர வேண்டும். அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால் அவரை நீக்க வேண்டிய அவசியமே இல்லை. அவரது திறனை சந்திக்க வேண்டியதும் இல்லை.

அவரது தலைமையில் நாம் டுவென்டி 20 உலகக் கோப்பை, ஒரு நாள் உலகக் கோப்பையை வென்றுள்ளோம். பிறகு எதற்கு அவரை சந்தேகிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் கபில்.

அதானே.. ஏன் சந்தேகிக்கனும்....??

Story first published: Tuesday, March 25, 2014, 17:37 [IST]
Other articles published on Mar 25, 2014
English summary
There is no rush to make Kohli into captaincy, let Dhoni continue, said former captain Kapil Dev.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+