Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்கள எல்லாம் பார்த்தா ஆளா தெரியலையா... கமின்ஸ் ஆதங்கம்... முன்னாள் வீரர் ஆதரவு

சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி வரும் 17ம் தேதி அடிலெய்டில் துவங்கவுள்ளது.

இதில் பாட் கமின்ஸ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக எப்போதும் பேட்ஸ்மேன்களே இருப்பதற்கான காரணம் தனக்கு தெரியவில்லை என்று பாட் கமின்ஸ் கூறியுள்ளார்.

பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம்

பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம்

ஆஸ்திரேலியாவின் கேப்டனாக கடந்த 1956ல் பந்துவீச்சாளர் ரே லிண்ட்வால் இருந்துள்ளார். அவரை அடுத்து எந்த பௌலரும் கேப்டனாக இல்லை. தொடர்ந்து பேட்ஸ்மேன்களே அதில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பௌலர்கள் யாரும் ஏன் கேப்டனாக நியமிக்கப்படுவதில்லை என்று பௌலர் பாட் கமின்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

17ம் தேதி துவக்கம்

17ம் தேதி துவக்கம்

வரும் 17ம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக அடிலெய்டில் துவங்கவுள்ளது. இதில் பாட் கமின்ஸ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டிம் பெய்ன் கேப்டனாக செயல்பட்டுவரும் நிலையில் அவருடைய கேப்டன்ஷிப் சமீப காலங்களில் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

முன்னாள் வீரர் ஆதரவு

முன்னாள் வீரர் ஆதரவு

இந்நிலையில் பாட் கமின்ஸிற்கு முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆதரவு தெரிவித்துள்ளார். பெய்னிற்கு பிறகு கேப்டன் பொறுப்பை ஏற்க பாட் கமின்ஸ் தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் துணை கேப்டனாக அவர் தொடர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

கேப்டன்களாக பேட்ஸ்மேன்கள்

கேப்டன்களாக பேட்ஸ்மேன்கள்

பந்துவீச்சாளர்களின் அதிகப்படியான வேலைப்பளு காரணமாக ஆஸ்திரேலியாவில் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கே கேப்டன்ஷிப் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 11 மாதங்களாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் உள்ள பாட் கமின்ஸ் தற்போது இந்தியாவிற்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

Story first published: Friday, December 11, 2020, 15:30 [IST]
Other articles published on Dec 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+