Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்ல எந்த மாற்றமும் செய்யாம முழுமையா நடத்துங்க ப்ளீஸ்... சிஎஸ்கே கோரிக்கை

சென்னை : ஐபிஎல் போட்டிகளை இந்த ஆண்டே நடத்த பிசிசிஐ ஆர்வமாக உள்ளது வரவேற்கத்தக்கது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தெரிவித்துள்ளது.

ஐபிஎல் விவகாரத்தில் பிசிசிஐ எந்த முடிவை எடுத்தாலும் வரவேற்பதாக தெரிவித்துள்ள சிஎஸ்கே, ஆனால் அதில் எந்த மாற்றமும் இன்றி முழுதாக ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆனால் தற்போது ஐபிஎல் குறித்த எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றும், பல்வேறு விஷயங்களில் தெளிவு ஏற்பட்ட பின்பே, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்றும் சிஎஸ்கே தெரிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு

ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 29ம் தேதி துவங்க திட்டமிடப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் போட்டிகளை இந்த ஆண்டே நடத்தி முடிக்க பிசிசிஐ தீவிரமாக உள்ளது. இதுகுறித்து ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி சில தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதியுள்ளார். மேலும் ஐபிஎல் போட்டிகளுக்காக தயாராகும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது எதையும் திட்டமிட முடியாது

தற்போது எதையும் திட்டமிட முடியாது

சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து வரும் 19ம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிர லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஐபிஎல் குறித்து எந்த திட்டமிடலையும் மேற்கொள்வது சரியாக இருக்காது என்று சிஎஸ்கே தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் காத்திருந்தே முடிவெடுக்க வேண்டும் என்றும் சிஎஸ்கே தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சிஎஸ்கே வரவேற்பு

சிஎஸ்கே வரவேற்பு

ஐபிஎல் போட்டிகளை இந்த ஆண்டே நடத்த பிசிசிஐ ஆர்வமாக உள்ளதற்கு சிஎஸ்கே வரவேற்பு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் அதிகமான தெளிவு தேவைப்படுவதாக தெரிவித்துள்ள சிஎஸ்கே, அந்த தெளிவு கிடைத்தவுடன் தான் போட்டிகளுக்காக சிஎஸ்கே தன்னை தயார்படுத்திக் கொள்ள துவங்கும் என்றும் கூறியுள்ளது.

சிஎஸ்கே கோரிக்கை

சிஎஸ்கே கோரிக்கை

தற்போதைய சூழலில் ஐபிஎல் போட்டிகளை சுருக்கி நடத்த சில அணிகள் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளன. ஆனால் இந்த முடிவுக்கு சிஎஸ்கே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆயினும் பிசிசிஐ எடுக்கும் எந்த முடிவையும் தாங்கள் ஆதரிப்பதாக தெரிவித்துள்ள சிஎஸ்கே, ஆனால் ஐபிஎல் போட்டிகளை சுருக்காமல் முழுமையாக நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

Story first published: Tuesday, June 16, 2020, 19:38 [IST]
Other articles published on Jun 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+