கவனமா இருங்க.. நான் மும்பைக்கு வந்தாலும் வருவேன்.. ஹவுடி மோடியில் டொனால்ட் ட்ரம்ப் திடீர் அதிரடி!
Recommended Video
ஹூஸ்டன் : இந்தியாவில் அடுத்த சில நாட்களில் நடைபெற உள்ள என்பிஏ கூடைப்பந்து விளையாட்டு துவக்க விழாவில் தான் வந்தாலும் வருவேன் எனக் கூறி அதிர வைத்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
ஹவுடி மோடி எனும் நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் சுமார் 50,000 இந்திய அமெரிக்கர்கள் கூடி இருந்தனர்.
அந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் பங்கேற்றார். வழக்கம் போல தன் அதிரடி பேச்சால் கலகலப்பூட்டினார் ட்ரம்ப்.

இந்தியா - அமெரிக்கா உறவு
இரு நாட்டு தலைவர்களும் இந்தியா - அமெரிக்கா இடையே உள்ள உறவை பற்றி குறிப்பிட்டு வந்தனர். பிரதமர் மோடி தன் சிறந்த நண்பர் என்று கூறி பலத்த கைதட்டலை பெற்றார் ட்ரம்ப்.

என்பிஏ கூடைப்பந்து துவக்கம்
மும்பையில் அக்டோபர் 4 மற்றும் 5 தேதிகளில் இரண்டு கண்காட்சி என்பிஏ கூடைப்பந்து போட்டிகள் நடைபெற உள்ளது. அமெரிக்காவில் பிரபலமான அந்த தொடரை இந்தியாவில் முதன் முறையாக நடத்த உள்ளனர். அதற்கான முன்னேற்பாடு தான் இது.

அமெரிக்க தயாரிப்பு
அந்த போட்டிகளை பற்றி குறிப்பிட்டு பேசிய டொனால்ட் ட்ரம்ப், "கூடிய விரைவில் இந்தியா, உலகத் தரம் வாய்ந்த அமெரிக்க தயாரிப்பை - என்பிஏ கூடைப்பந்து விளையாட்டை பெற உள்ளது. அது நல்ல விஷயம்" என்றார்.

நான் வந்தாலும் வருவேன்”
மேலும், "அடுத்த வாரம் ஆயிரக்கணக்கனோர் மும்பையில் முதன் முறையாக என்பிஏ போட்டியை பார்க்க இருக்கிறார்கள். என்னை அழைத்து இருக்கிறீர்களா பிரதமர்? நான் வந்தாலும் வருவேன். கவனமாக இருங்கள். நான் வந்தாலும் வருவேன்" என்றார்.

கைதட்டல் வாங்க கூறினாரா?
எதிர்பாராத விஷயங்களை செய்வதில் வல்லவர் டொனால்ட் ட்ரம்ப். ஒருவேளை திடுதிப்பென்று இந்தியா வந்து இறங்கினாலும் ஆச்சரியம் இல்லை. இல்லை சும்மா கைதட்டல் வாங்க அப்படி கூறினாரா? விரைவில் தெரியும்.


Click it and Unblock the Notifications