என்னை கோலி, ஸ்மித் கூடவெல்லாம் ஒப்பிடாதீங்க - பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் காட்டம்!
இஸ்லாமாபாத் : தன்னை விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் போன்றவர்களுடன் ஒப்பிடுவது முட்டாள்தனமானது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுடன் விளையாடிய டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20 தொடர்களில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்துள்ளது. ஆயினும் இதில் விளையாடிய பாபர் அசாம் தன்னுடைய ஆட்டத்தின் மூலம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளார்.
இந்நிலையில், தான் விராட் கோலி மற்றும் ஸ்டீவி ஸ்மித் அளவிற்கு அதிகமான போட்டிகளில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ள அசாம், தன்னை அவர்களுடன் ஒப்பிடுவது அபத்தமானது என்று கூறியுள்ளார்.

குறைந்த ஆட்டங்களில் அதிக ரன்கள்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம், 23 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 74 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். ஆனால் அதற்குள்ளாகவே ரன் குவிப்பு மூலம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுள்ளார்.

ரன்கள் குவித்ததால் பாராட்டு
நடந்து முடிந்துள்ள பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய தொடரில் 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 சர்வதேச டி20 போட்டிகளை விளையாடப்பட்டது. இதில் முறையே 2-0 மற்றும் 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்துள்ளது. ஆயினும் இந்த தொடரில் டெஸ்ட் போட்டிகளில் பாபர் அசாம் 210 ரன்கள் குவித்து அதிக ரன்களை எடுத்த 3வது ஆட்டக்காரராக உள்ளார். இதேபோல டி20 தொடரில் 115 ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார்.

கோலி, ஸ்மித்துடன் ஒப்பீடு
இந்த தொடர் மட்டுமின்றி, அசாம் விளையாடியுள்ள அனைத்து போட்டிகளிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்றுவிடுவார். இதனால் இவரை விராத் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித்துடன் அவர்கள் ஒப்பிடுகிறார்கள்.

பாபர் அசாம் குற்றச்சாட்டு
தான் இதுவரை 23 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 74 சர்வதேச ஒருநாள் போட்டிகள் என குறைவான போட்டிகளிலேயே விளையாடியுள்ளதாக தெரிவித்துள்ள அசாம், கோலி, ஸ்மித் போன்றவர்கள் அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ளதால் அவர்களை தன்னுடைய ஒப்பிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

உலக அளவில் 5 வீரர்களில் ஒருவனாக விருப்பம்
தான் சிறந்தவற்றுடனே போட்டியிட விரும்புவதாக தெரிவித்துள்ள பாபர் அசாம், உலக அளவில் 5 வீரர்களில் ஒருவனாக தான் ஆக விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்காக சிறப்பாக விளையாட வேண்டும்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் தான் இணைந்து விளையாடத் துவங்கியபொழுது தன்னுடைய நாட்டிற்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்ற இலக்குடன் தான் தன்னுடைய பயணத்தை துவக்கியதாகவும் அசாம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications