தோனியையே ஏன் திட்டுறீங்க..? இந்த 2 விஷயத்தால் தான் தோத்தோம்...! காரணம் சொல்லும் அவர்
Recommended Video
மும்பை: மழையும், தோனியின் ரன் அவுட்டுமே இந்திய அணி தோற்க காரணம் என்று பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறியிருக்கிறார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் அரையிறுதியில் தோற்ற இந்திய அணி உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. தொடர் முடிந்த நிலையில் அணி வீரர்கள் தாய்நாடு திரும்பி இருக்கின்றனர்.
இந் நிலையில் அணியின் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் பிரபல நாளிதழுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் பயணம், செயல்பாடுகள் என பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

வலிமை அணி
அவர் கூறியிருப்பதாவது: அரையிறுதிக்கு முன்பு வரை இந்தியா மிக வலிமையான அணி என்று நான் கருதுகிறேன். நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி மழை காரணமாக மறு நாள் தள்ளிப் போனதால் அந்த போட்டி இந்திய அணிக்கு சிக்கலானது.

இதுதான் காரணம்
அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஏனென்றால் மறுநாள் பிட்சின் தன்மை மாறி விட்டது. அதனால் இந்திய அணி தோல்வியையும் சந்தித்தது. அணியின் தோல்விக்கு தோனியை விமர்சிப்பதில் நியாயம் இல்லை.

தோனியின் பங்களிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு அவர் அளித்த பங்கு அபரிதமானது. அவர் ஒரு ஜாம்பவான். பல சந்தர்ப்பங்களில் சிறப்பாக இந்திய அணியும் வழி நடத்தி உள்ளார். கோலிக்கு பல முறை சிறப்பான ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்.

போட்டியை இழந்தோம்
அரையிறுதியில் தோனி களத்தில் இருக்கும் வரை இந்தியா வெற்றி பெற்று விடும் என்று நாங்கள் நம்பினோம். ஏனெனில் இறுதிக் கட்டங்களில் அவர் பெரிய ஷாட்டை அடிக்க தன்னை தயார் செய்து கொண்டிருந்தார். அதிர்ஷ்டம் இன்றி திடீரென்று தோனி ரன் அவுட் ஆனதால் அந்த போட்டியை இழந்தோம் என்றார்.


Click it and Unblock the Notifications