பயிற்சியில் இருந்த இந்திய வீரர்..! அள்ளிக் கொண்டு போய் ஊக்கமருந்து சோதனை..! இந்திய அணி அதிர்ச்சி
லண்டன்: இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு திடீரென ஊக்க மருந்து சோதனை மேற்கொள்ளப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில், இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவை சந்திக்கிறது. சவுதாம்டனில் நாளை நடக்கும் இந்த போட்டிக்காக, இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தென் ஆப்ரிக்க அணி, தான் மோதிய இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளதால், இந்த போட்டியை எப்படியாவது வெல்ல வேண்டும் என்று தீவிரமாக உள்ளது. அதற்காக பல திட்டங்களை வைத்துள்ளதாகவும் அந்த அணி தெரிவித்திருக்கிது.

பும்ராவுக்கு சோதனை
இந்நிலையில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு ஊக்க மருந்து சோதனை மேற் கொள்ளப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயிற்சியில், பும்ரா நேற்று ஈடுபட்டிருந்த போது, அவரை மட்டும் ஊக்கமருந்து தடுப்பு பிரிவினர் அழைத்துச் சென்றனர்.

2 கட்டங்களாக சோதனை
அதை மைதான அதிகாரிகள் உறுதி செய்திருக்கின்றனர். மொத்தம் 2 கட்டங்களாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. முதலில், சிறுநீர் சோத னையும், 45 நிமிடங்கள் கழித்து ரத்த பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனை முடிவு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

உறுதி செய்த பிசிசிஐ
வேறு எந்த வீரருக்கும் ஊக்கமருந்து சோதனை நடத்தப் பட்டதா என்ற விவரமும் வெளியிடப் படவில்லை. அதே நேரத்தில் இந்த ஊக்க மருந்து சோதனையை, இந்திய கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது. இங்கிலாந்தில் நிலவும் தெளிவற்ற வானிலையால், பந்து வீச்சு வியூகத்தை வகுப்பதில் இந்திய அணி நிர்வாகம் திணறி வருகிறது.

இந்தியா அதிர்ச்சி
நாளை உலக கோப்பை தொடரில் தமது முதல் போட்டியில் இந்தியா விளையாட உள்ளது. இந்த சூழ்நிலையில் பும்ராவுக்கு ஊக்கமருந்து பரிசோதனை செய்யப்பட்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications