Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் ஓவரிலேயே இப்படியா.. நார்மல் மோடுக்கு திரும்பிய இந்திய அணி.. சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் அவுட்!

அக்லாண்ட்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் இருவரும் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து வெளியேறி இருக்கின்றனர். சஞ்சு சாம்சன் 4 ரன்களிலும், இஷான் கிஷன் டக் அவுட்டாகியும் வெளியேறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். ஆனால் ஏன் பவுலிங்கை தேர்வு செய்தோம் என்று யோசிக்கும் அளவிற்கு நியூசிலாந்து அணி ரன்களை விளாசி தள்ளியது. 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 259 ரன்களை குவித்தது.

Sanju Samson

நியூசிலாந்து அணியின் கிளென் பிலிப்ஸ் 49 பந்துகளில் 10 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 107 ரன்களையும், பிரேஸ்வெல் 25 பந்துகளில் 6 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 65 ரன்களையும் குவித்தனர். இதன்பின் இந்திய அணி 260 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது. சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி முதல் ஓவரை வீசினார்.

முதல் பந்திலேயே சஞ்சு சாம்சன் பவுண்டரி அடிக்க, அடுத்த பந்தை கொஞ்சம் கூடுதல் வேகத்தில் ஷார்ட்டாக டஃபி வீசினார். அதனை புல் ஷாட் ஆட முயன்று சஞ்சு சாம்சன் பேட்டை வீச, அது டாப் எட்ஜாகி உச்சத்திற்கு சென்றது. அதனை விக்கெட் கீப்பர் செய்ஃபெர்ட் கேட் பிடித்தார். தொடர்ந்து இஷான் கிஷன் களம் புகுந்தார். காயத்திற்கு பின் வருவதால் இஷான் கிஷன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.

ஆனால் டஃபி வீசிய பந்தை அதன் போக்கிலேயே அடிக்க இஷான் கிஷன் முயற்சித்த போது, அது பேட்டின் அடிப் பக்கத்தில் பட்டு எட்ஜாகி நேராக பவுலரின் கைகளில் சென்று விழுந்தது. இதனால் இந்திய அணி 4 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. கடந்தப் போட்டியில் முதல் ஓவரிலேயே 26 ரன்களை இந்திய அணி விளாசியது.

அப்படியான தொடக்கம் தேவை என்ற சூழலில், இரு முக்கிய பேட்ஸ்மேன்களும் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பி இருக்கின்றனர். இதனால் இந்திய அணியின் மொத்த பாரமும் அபிஷேக் சர்மா தலையில் விழுந்தது. அதனை அபிஷேக் சர்மா எப்படி கையாள்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Friday, October 30, 2026, 15:02 [IST]
Other articles published on Oct 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+