Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கங்குலி மற்றும் ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன் செய்ய கோஹ்லிக்கு வாய்ப்பு

டெல்லி: இலங்கைக்கு எதிராக டெல்லியில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால், ஒரே நேரத்தில் இரண்டு சாதனைகளை சமன் செய்யும் வாய்ப்பு கேப்டன் விராட் கோஹ்லிக்கு கிடைத்துள்ளது.

மூன்று டெஸ்ட்கள், மூன்று ஒருதினப் போட்டிகள், மூன்று டி-20 போட்டிகளில் விளையாட, இலங்கை கிரிக்கெட் அணி வந்துள்ளது. இதில் டெஸ்ட் போட்டித் தொடரில் கோல்கத்தாவில் நடந்த போட்டி டிராவில் முடிந்தது. அடுத்ததாக நாக்பூரில் நடந்த போட்டியில் இந்திய அணி வென்று 1-0 என முன்னிலையில் உள்ளது.

மூன்றாவது டெஸ்ட் போட்டி, டெல்லியில் நாளை துவங்குகிறது. இதில் இரண்டு சாதனைகளை சமன் செய்யும் வாய்ப்பு இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லிக்கு கிடைத்துள்ளது.

ஆஸி சாதனை சமன் செய்ய வாய்ப்பு

ஆஸி சாதனை சமன் செய்ய வாய்ப்பு

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, தொடர்ந்து, எட்டு டெஸ்ட் போட்டித் தொடரை வென்றுள்ளது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றால் தொடர்ந்து 9 டெஸ்ட் தொடர்களில் வெற்றி என்ற ஆஸ்திரேலிய அணியின் சாதனையை சமன் செய்ய முடியும். ஆஸ்திரேலிய அணி, 2005 - 2008 காலகட்டத்தில் தொடர்ந்து 9 டெஸ்ட் தொடர்களில் வென்றுள்ளது.

இலங்கையில் துவக்கிய வெற்றி பயணம்

இலங்கையில் துவக்கிய வெற்றி பயணம்

இந்திய அணி, 2015ல், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது. அதன் பிறகு, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இன்டீஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இலங்கை என அனைத்து டெஸ்ட் தொடரையும் வென்றுள்ளது.

டோணிக்கு அடுத்த இடம் கிடைக்கும்

டோணிக்கு அடுத்த இடம் கிடைக்கும்

இதற்கு இடையில், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் ஒரு சாதனையை சமன் செய்யும் வாய்ப்பு கோஹ்லிக்கு கிடைத்துள்ளது. கேப்டனாக அதிக டெஸ்ட்களில் வெற்றி என்ற பெருமை, கேப்டன் கூல், மகேந்திர சிங் டோணிக்கு உள்ளது. அவர், 60 போட்டிகளில், 27 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

49 போட்டிகளில் 21 வெற்றி

49 போட்டிகளில் 21 வெற்றி

அதற்கு அடுத்து சவுரவ் கங்குலி கேப்டனாக 49 போட்டிகளில், 21 வெற்றிகளைப் பெற்றுள்ளார். கோஹ்லி கேப்டனாக இதுவரை 31 போட்டிகளில், 20ல் வென்றுள்ளார். டெல்லி டெஸ்டை வென்றால் கங்குலியின் சாதனையை சமன் செய்ய முடியும்.

Story first published: Friday, December 1, 2017, 14:10 [IST]
Other articles published on Dec 1, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+