நிறவெறியுடன் செயல்படுகிறதா ஐசிசி.. ரபாடாவுக்கு ஒரு நியாயம், ராபின்சனுக்கு ஒரு நியாயமா? அநியாயம்
ஐசிசி என்று அழைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் நிறவெறியுடன் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. நிறவெறிக்கு எதிராக குரல் கொடுப்போம் என்று ஒவ்வொரு போட்டியிலும் வெறும் வாய் வார்த்தைகளை மட்டுமே ஐசிசி சொல்கிறது.
ஆனால், போட்டிகளில் வெள்ளையர் ஏதேனும் தவறு செய்தால் ஒரு மாதிரியும் மற்றவர்கள் தவறு செய்தால் வேறொரு மாதிரியும் நடவடிக்கை எடுக்கிறது.

குறிப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சுப்மன் கில் ஆட்டம் இழந்த முறையில் கடும் விமர்சனங்கள் எழுந்தது. அப்போது பலரும் இதுவே ஸ்மித் பேட்டிங் செய்யும்போது இந்திய வீரர் இப்படி கேட்ச் பிடித்திருந்தால். அதற்கு மூன்றாம் நடுவர் அவுட்டு கொடுத்திருப்பாரா என்று கேள்வி கேட்டு வந்தனர்.
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு சர்ச்சை எழுந்திருக்கிறது.
ஆசஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் கவாஜா 141 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். அப்போது பந்து வீசிய ராபின்சன் கவாஜாவை தகாத வார்த்தையில் திட்டினார். ஆனால் இதற்கு ஐசிசி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இது கிரிக்கெட்டில் சாதாரணமாக நடப்பது தான் என்று கருத்துக்களை தெரிவித்து கடந்து விட்டது.

ஆனால் இதேபோன்று தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் ரபாடா விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டு கடுமையாக கத்திய போது எல்லாம் ஐசிசி அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது. 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸை ஆட்டம் இழக்க வைத்து ரபடா கத்திய போது அவருக்கு மைனஸ் புள்ளிகளை வழங்கியிருக்கிறது. இதேபோன்று 2018 ஆம் ஆண்டும் 2020 ஆம் ஆண்டு ராபாடாவுக்கு ஐசிசி தண்டனை வழங்கியிருக்கிறது.
இதேபோன்று ஆசிய வம்சாவளியை சேர்ந்த மோயின் அலி கையில் ஸ்பிரே அடித்தார் என்று அவர் மீது நடவடிக்கை எடுத்தது. ஆனால் தகாத முறையில் நடந்து கொண்ட ராபின்சன் மீது ஐசிசி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வெள்ளையர்களுக்கு எதிராக ஒரு மாதிரியும் மற்றவர்களுக்கு எதிராக ஒரு மாறியும் ஐசிசி நடந்து கொள்கிறதா என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications