பெங்களூர் மருத்துவமனையில் ராகுல் டிராவிட்டுக்கு அறுவை சிகிச்சை!
பெங்களூர்: தாடை எலும்பு முறிவால் அவதிப்பட்டு வந்த கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டுக்கு பெங்களூர் மருத்துவமனையின் இன்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
வங்கதேசத்தில் அந்நாட்டு அணிக்கு எதிராக கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது டிராவிட்டின் தலையில் பந்து வேகமாக அடித்து தாடை எலும்பில் லேசான முறிவு ஏற்பட்டது.
இதனால் போட்டியில் இருந்து விலகிய டிராவிட் பெங்களூருக்கு திரும்பி சிகிச்சை எடுத்துவந்தார். இதையடுத்து இன்று பெங்களூர் மனிப்பால் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக மருத்துவர்கள் கூறினர். ராகுல் நலமாக இருப்பதாகவும், இன்றே அவர் வீட்டுக்கு செல்லலாம் என்றும் மணிப்பால் மருத்துவமனை இயக்குனர் எஸ்.பல்லால் தெரிவித்தார்.
அடுத்த இரண்டு நாட்களில் ராகுல்டிராவிட் வழக்கம் போல தனது பணிகளில் ஈடுபடலாம் என்று மருத்துவர்கள், மூன்று வாரத்துக்கு கிரிக்கெட் விளையாடாமல் இருப்பது நல்லது என்றும் அறிவுரை கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications