கேப்டன் பதவியிலிருந்து டிராவிட் திடீர் விலகல்
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ராகுல் டிராவிட் விலகியுள்ளார். தன்னை அப்பொறுப்பிலிருந்து விலக்கிடும்படி அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் முதல் சுற்றிலேயே இந்தியா கேவலமாக தோற்றதைத் தொடர்ந்து டிராவிட் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். அவருக்கும் மூத்த வீரர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக ஒரு புகார் எழுந்தது.
இந்த நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் 20-20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் டிராவிட் பங்கேற்கவில்லை. இதனால் டோணி கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இந் நிலையில் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக டிராவிட் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், விளையாட்டில் தீவிர கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளேன். எனவே கேப்டன் பதவியை ராஜினாமா செய்கிறேன்.
இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய அணியில் நான் சாதாரண வீரராக இடம் பெற விரும்புகிறேன். எனவே அதற்குள் எனக்குப் பதில் வேறு கேப்டனைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
டிராவிடின் இந்த முடிவு குறித்து வருகிற 19ம் தேதி நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரியக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:29 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications