ராகுல் டிராவிட்தான் பிரதமர் ஆகணும்.. நெட்டிசன்களின் திடுக் கோரிக்கை

Posted By:
ராகுல் டிராவிட்டை பிரதமராக்க ஆசைப்படும் ரசிகர்கள்- வீடியோ

சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பிரதமர் ஆக வேண்டும் நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். நேற்றில் இருந்து இந்த விஷயம் வைரலாகி வருகிறது.

இந்திய ஜூனியர் அணி சில நாட்களுக்கு முன்பு நடந்த உலகக் கோப்பை போட்டியை வென்றது. இது இந்திய அணி வெல்லும் நான்காவது உலகக் கோப்பை போட்டியாகும்.

இந்திய வீரர்கள் இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். இதில் ஒரு போட்டியில் கூட இந்திய ஜூனியர் அணி தோற்கவில்லை.

டிராவிட் பயிற்சி

டிராவிட் பயிற்சி

சத்தமில்லாமல் அமைதியாக ராகுல் டிராவிட் கோப்பையை வாங்கி கொடுத்து இருக்கிறார். டிராவிட் இந்திய ஜூனியர் அணியை மட்டும் நல்ல நிலைக்கு கொண்டு வந்து இருக்கிறார். அவர் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தை உருவாக்கி இருக்கிறார். இந்திய அணிக்கு சிறப்பான பயிற்சி அளித்தார்.

உதவி

உதவி

இதுகுறித்து அவர் பேசும் போது, இதற்கு நான்மட்டும் பொறுப்பில்லை, என்னுடன் வேலை பார்த்த சக பயிற்சியாளர்களும்தான் பொறுப்பு என்றார். பயிற்சி குழுவில் யாரெல்லாம் இருந்தார்களோ அவர்கள் எல்லாம் இதற்கு பொறுப்பானவர்கள் என்று குறிப்பிட்டார்.

சம்பளம்

சம்பளம்

இந்த நிலையில் தற்போது ஜூனியர் அணி பயிச்சியாளர்களுக்கு சீனியர் அணி பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படுவது போலவே சம்பளம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். நான்கு உலகக் கோப்பையை வாங்கி கொடுத்தது இவர்கள்தான் என்றுள்ளார்.

பிசிசிஐ ஒப்புதல்

பிசிசிஐ ஒப்புதல்

இதற்கு தற்போது பிசிசிஐ ஒப்புதல் வழங்கி இருக்கிறது. அதன்படி சீனியர் அணி பயிற்சியாளர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்திற்கு இணையான சம்பளம் கொடுக்க இருப்பதாக கூறியுள்ளனர். வீரர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட இருக்கிறது.

பிரதமர் ராகுல்

இதையடுத்து பலரும் ராகுல் டிராவிட்தான் பிரதமர் ஆக வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். இவர் ''எந்த கட்சி ராகுல் டிராவிட்டை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கிறதோ, அந்த கட்சிக்குத்தான் வாக்கு'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

பிரதமர்

பிரதமர்

இவர் ''இந்தியாவில் யார் பிரதமர் ஆக வேண்டும் என்று கேட்டால், கண்டிப்பாக ராகுல் டிராவிட்தான் பிரதமர் ஆக வேண்டும் என்று கூறுவேன்'' என்றுள்ளார்.

Story first published: Wednesday, February 28, 2018, 13:53 [IST]
Other articles published on Feb 28, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற