கனவு நனவான தருணம்... இந்திய அணியில் இளம் வீரரின் வலை பயிற்சி... வீடியோ வெளியிட்ட பிசிசிஐ
சிட்னி : இந்திய டி20 அணியின் இடம்பெற்றுள்ள டி நடராஜன், முதல் முறையாக சிட்னியில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.
அவரது கனவு நனவான இந்த தருணத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
டி20 அணியில் இடம்பெற்றிருந்த வருண் சக்ரவர்த்திக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக நடராஜன் இடம்பெற்றுள்ளார்.

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய தமிழக வீரர் டி நடராஜன், தன்னுடைய யார்க்கர் பந்துகளால் எதிரணியினரை திணறடித்தார். மேலும் இந்த தொடரில் 16 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 அணியில் வருண் சக்கரவர்த்தி நீக்கப்பட்டு, நடராஜன் தற்போது இடம்பிடித்துள்ளார்.
இதையொட்டி சிட்னி சென்றுள்ள டி நடராஜன் முதல் முறையாக இந்திய அணியினருடன் இணைந்து வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். இந்த வீடியோவை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும் நடராஜனின் கனவு நனவான தருணம் என்றும் கேப்ஷன் வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications