Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரண களத்திலும் ஒரு கிளுகிளுப்பு.. அனுஷ்காவை கேலி செய்வோரை வறுத்தெடுத்த கோஹ்லி

மும்பை: மனத்தாங்கலால் பிரிந்து இருந்தாலும், காதலி அனுஷ்கா சர்மா குறித்து, சமூக வலைத்தளங்களில் கேலி பேச்சு உலவுவதை தனக்கே உரித்தான ஆக்ரோஷ பாணியில் கண்டித்துள்ளார் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி.

பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கும், விராட் கோஹ்லிக்கும் காதல் இருந்தது உலகறிந்த விஷயம். 50 ஓவர் உலக கோப்பைக்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்தபோது, கோஹ்லியுடனே ஒட்டிக்கொண்டு ஊர் சுற்றி சர்ச்சைக்குள்ளானார் அனுஷ்கா.

அந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை தவிர்த்து பிற போட்டிகளில் கோஹ்லி சரியாக ஆடவில்லை. இதற்காக அனுஷ்காவை சாடி, ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோபத்தை கொட்டி தீர்த்தனர்.

பிரிவு

பிரிவு

இந்நிலையில், அனுஷ்கா மற்றும் கோஹ்லி நடுவே தனிப்பட்ட காரணங்களுக்காக பிரிவு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக இருவரையும் ஒன்றாக பார்க்க முடிவதில்லை.

மெசேஜ்

மெசேஜ்

இருப்பினும், இந்திய அணி வெற்றி பெரும் தருணங்களில், கோஹ்லிக்கு வாழ்த்து சொல்லி செல்போன் மெசேஜ் அனுப்புவதை அனுஷ்கா வாடிக்கையாக வைத்திருப்பதாக கிசுகிசு உலவுகிறது.

கேலி, கிண்டல்

கேலி, கிண்டல்

இந்நிலையில், டி20 உலக கோப்பையில் கோஹ்லி சிறப்பாக ஆடிவரும் நிலையில், மீண்டும் அனுஷ்கா பெயரை ரசிகர்கள் கையில் எடுத்து ட்ரோல் செய்து வருகிறார்கள்.

மீம்ஸ்கள்

மீம்ஸ்கள்

நன்றி அனுஷ்கா, எங்கள் கோஹ்லியை எங்களிடமே திருப்பி கொடுத்துவிட்டீர்கள்.. என்பது போன்ற மீம்ஸ்களை உருவாக்கி சோஷியல் மீடியாக்களில் உலவ விட்டுள்ளனர்.

ஆக்ரோஷம்

ஆக்ரோஷம்

இதுகுறித்து கோஹ்லி கவனத்திற்கு எப்படியோ தகவல் போயுள்ளது. இன்று மதியம் கோஹ்லி வெளியிட்ட டிவிட்டில், தனது ஆக்ரோஷத்தை காட்டியுள்ளார்.

இரக்கமில்லையா உங்களுக்கு

அனுஷ்கா ஷர்மாவை, நிறுத்தாமல் ட்ரோல் செய்வோரை பார்த்து வெட்கப்படுகிறேன். கொஞ்சமாவது இரக்க சுபாவத்தை கொண்டிருங்கள். அனுஷ்கா எப்போதுமே எனக்கு நேர்மறையைத்தான் தந்துள்ளார். இவ்வாறு கோஹ்லி டிவிட் செய்துள்ளார்.

ஊடல் முடிந்தது

ஊடல் முடிந்தது

இந்த டிவிட்டில் அனுஷ்காவின் டிவிட்டர் ஹேண்டிலையும் டேக் செய்துள்ளார், கோஹ்லி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி பற்றி கூட டிவிட் செய்யாத கோஹ்லி, காதலிக்காக வரிந்து கட்டியுள்ளதை பார்க்கும்போது, காதலர்களின் ஊடல் முடிந்து, கூடல் காலம் ஆரம்பித்து விட்டது போலும் என்றே சொல்ல தோன்றுகிறது.

Story first published: Monday, March 28, 2016, 15:00 [IST]
Other articles published on Mar 28, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+