For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வயிறுமுட்ட குடித்துவிட்டு.. மேட்ச் நடக்கும் போதே.. "கும்மாளம்" அடித்த இங்கிலாந்து ஃபேன்ஸ்

பிர்மிங்கம்: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில், இங்கிலாந்து ரசிகர்கள் குடித்துவிட்டு செய்த அலம்பலில் இரண்டு பாதுகாவலர்கள் காயம் அடைந்துள்ளனர்.

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பேஸ்டனில் நடந்து வருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, முதல் இன்னிங்சில் 303 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதைத் தொடர்ந்து, களமிறங்கிய நியூசிலாந்து நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்திருந்தது.

கேப்டன் சறுக்கல்

கேப்டன் சறுக்கல்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இரட்டை சதம் விளாசிய டெவோன் கான்வே, இப்போட்டியிலும் சதம் அடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர் 143 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் எடுத்திருந்த போது அவுட்டானார். அதே போல், வில் யங் 82 ரன்கள் எடுத்து அவுட்டானார். ராஸ் டெய்லர் 46 ரன்களுடன் களத்தில் உள்ளார். கேப்டன் டாம் லாதம் வெறும் 6 ரன்களில் அவுட்டானது குறிப்பிடத்தக்கக்து.

கும்மாளம்

கும்மாளம்

இந்நிலையில், போட்டியின் போது இங்கிலாந்து ரசிகர்கள் சிலர் குடித்துவிட்டு அட்டகாசம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எட்ஜ்பேஸ்டன் ஸ்டேடியத்தில் ஆட்டத்தின் ஒவ்வொரு நாளும் 18,000 ரசிகர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதில், பலரும் குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கவே போட்டியைப் பார்க்க வருவதாக குற்றச்சாட்டு எழுகிறது.

கட்டுப்பாட்டை மீறி

கட்டுப்பாட்டை மீறி

நேற்று (ஜூன்.11) போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில், குடித்துவிட்டு அட்டகாசம் செய்த ரசிகர்களால் இரு பாதுகாவலர்கள் காயம் அடைந்திருக்கின்றனர். குடித்துவிட்டு அலம்பல் செய்த வீரர்களை அப்புறப்படுத்தும் போது, தோள்பட்டையிலும், கட்டைவிரலிலும் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "வயிறு முட்ட குடித்துவிட்டு நிறைய பேர் ஸ்டேடியத்திற்கு வருகின்றனர். இவர்களை கட்டுப்படுத்த போதிய போலீஸாரும் இல்லை. ரசிகர்கள் கட்டுப்பாட்டை மீறி செல்கின்றனர்" என்றனர்.

 ரசிகர்களின் சேட்டை

ரசிகர்களின் சேட்டை

இங்கிலாந்து வீரர்களான ஓலே ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன், இயன் மோர்கன், ஜோஸ் பட்லர் ஆகியோர் இனவெறி, பாலியல், லெஸ்பியன், ஆங்கில புலமையை கிண்டல் செய்வது தொடர்பாக சர்ச்சையான டிவீட்களை பதிவிட்டு சிக்க, ஒன்றும் சொல்ல முடியாமல் தவித்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், இப்போது தனது ரசிகர்களின் சேட்டையாலும் தலைகுனிந்து நிற்கிறது. யாரோ பெருசா செய்வினை வச்சிட்டாங்க போல. போதாத குறைக்கு, இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. அப்போ என்னென்ன பண்ணப் போறாங்களோ!

Story first published: Saturday, June 12, 2021, 17:10 [IST]
Other articles published on Jun 12, 2021
English summary
Drunk fans at England v New Zealand 2nd test - இங்கிலாந்து
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+