பூஜ்யம் ரன்னுக்கு ஆல்-அவுட்.. இங்கிலாந்தில் ஒரு கிரிக்கெட் அணி பட்ட பாடு
லண்டன்: இங்கிலாந்தில் கிளப்புகளுக்கு நடுவே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் ஒரு அணி ஆல்-அவுட் ஆகியுள்ளது.

இங்கிலாந்தின் கேன்டர்பரி கிறைஸ்ட் சர்ச் பல்கலைக்கழக அணியும், பாப்சைல்ட் கிரிக்கெட் கிளப் அணியும், மோதின. முதலில் பேட் செய்த கிறைஸ்ட் சர்ச் அணி, ஒரு விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட் செய்த பாப்சைல்ட் அணி, பரிதாபமாக ஆடியது.
அந்த அணியில் பேட்ஸ்மேன்கள் வருவதும், டக்-அவுட் ஆகி போவதுமாக இருந்தனர். மொத்தம் 20 பந்துகளை மட்டுமே அந்த அணி மொத்தமாக எதிர்கொண்டது. அதற்குள்ளாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எனவே பூஜ்யம் ரன்னுக்கே ஆல்-அவுட் ஆனது, பாப்சைல்ட் கிரிக்கெட் அணி.
Story first published: Friday, February 12, 2016, 17:58 [IST]
Other articles published on Feb 12, 2016


Click it and Unblock the Notifications