Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுதான் வார்னிங்.. நீண்ட நேரம் பேசிய கோலி.. அடுத்த பந்திலேயே நடந்த ஆச்சர்ய சம்பவம்.. செம்ம பிளான்!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கோலி கொடுத்த அறிவுரை ஒன்றால் அடுத்த பந்திலேயே நதீம் விக்கெட் எடுத்த சம்பவம் வைரலாகி வருகிறது.

சென்னையில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறார்கள். அதிலும் ஜோ ரூட் 190+ ரன்களை எடுத்து உறுதியாக ஆடி வருகிறார்.

இங்கிலாந்து அணி 140 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 424 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் , போப் களத்தில் நின்று அதிரடியாக ஆடி வருகிறார்கள்.

பவுலிங்

பவுலிங்

இந்த போட்டியில் நதீம் பெரிய அளவில் சிறப்பாக பவுலிங் செய்யவில்லை. நேற்று 14 ஓவர்களை வீசிய நதீம் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. அதோடு இவரின் பவுலிங்கில் அதிக அளவு ரன்கள் சென்றது. இன்றும் தொடக்கத்தில் அதிகம் ரன் கொடுத்தார்.

நதீம்

நதீம்

நேற்றாவது சரியான லைனில் பவுலிங் செய்த நதீம் இன்று தனது லைனிலும் சொதப்பினார். இன்று காலை அடுத்தடுத்து இவர் நோ பால் போட்டு சொதப்பினார். அதோடு நதீம் அதிகமாக பவுண்டரியும் கொடுத்தார்.

அறிவுரை

அறிவுரை

இந்த நிலையில் இன்று ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த கோலி நேரடியாக நதீமிடம் சென்று கோபமாக பேசினார். நீண்ட நேரம் நதீமிடம் அறிவுரை கொடுத்தார். 127வது ஓவரை இவர் வீசும் முன் நீண்ட நேரம் எப்படி போட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அப்போது ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்து கொண்டு இருந்தார்.

பேட்டிங்

பேட்டிங்

கோலி இதற்கு ஏற்றபடி சரியாக பீல்டிங் நிறுத்தினார். எப்படி போட வேண்டும் என்று நதீமிற்கு முறையாக அறிவுரை வழங்கினார். இந்த நிலையில் அடுத்த பந்திலேயே நதீம் பந்தில் ஸ்டோக்ஸ் அவுட்டானார். கோலி சொன்னபடி நதீம் பந்து வீச.. ஸ்டாக்ஸ் சரியாக கேட்ச் கொடுத்தார்.

புஜாரா

புஜாரா

புஜாராவிடம் கேட்ச் கொடுத்து ஸ்டோக்ஸ் அவுட் ஆனார். இது நதீம் பவுலிங் திறமை என்பதை விட கோலியின் கேப்டன்சி மூலம் விழுந்த விக்கெட் ஆகும். கோலியின் இந்த முறையான திட்டமிடல் பெரிய அளவில் வைரலாகி வருகிறது .

Story first published: Saturday, February 6, 2021, 15:58 [IST]
Other articles published on Feb 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+