Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Duleep Trophy - துலீப் கோப்பை தொடருக்கான அணி அறிவிப்பு.. கில், பண்ட், ருதுராஜ்க்கு வாய்ப்பு.. விவரம்

மும்பை : இந்திய கிரிக்கெட்டில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் பிரதான தொடர்களில் ஒன்றாக துலீப் கோப்பை நடைபெறுகிறது. நடப்பு ஆண்டின் உள்நாட்டு போட்டிகளின் தொடக்கமாக இந்த தொடர் நடைபெறுகிறது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் சுற்று போட்டிகள் நடைபெறுகிறது.

இதற்காக 4 அணிகள் அறிவிக்ப்பட்டுள்ளது. இதில் இந்திய சீனியர் அணிகளுக்காக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுப்மன் கில், ரிஷப் பண்ட், சூர்யகுமார், இஷான் கிஷன், ருதுராஜ் போன்ற வீரர்கள் இந்த தொடரில் இடம்பெற்றுள்ளனர். இதில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்படும்.

cricket Duleep Trophy Virat kohli

பிசிசிஐயால் ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்கள் அனைவரும் தவறாமல் உள்ளூர் போட்டியில் வளையாட வேண்டும் என்று பிசிசிஐ அறிவித்துள்ள நிலையில், கோலி, ரோகித், பும்ரா, அஸ்வின், ஹர்திக் நீங்கலாக மற்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அணிகளின் விவரம் பின்வரும்மாறு.

ஏ அணி : சுப்மான் கில் (கேப்டன்), மயங்க் அகர்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், கேஎல் ராகுல், திலக் வர்மா, ஷிவம் துபே, தனுஷ் கோட்டியன், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, அவேஷ் கான், வித்வத் கவேரப்பா, குமார் குஷாக்ரா , ஷாஸ்வத் ராவத்.

பி அணி: அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான், ரிஷப் பந்த், முஷீர் கான், நிதிஷ் குமார் ரெட்டி*, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், யாஷ் தயாள், முகேஷ் குமார், ராகுல் சாஹர், ஆர் சாய் கிஷோர், மோஹித் அவஸ்தி , என் ஜெகதீசன் (WK).

சி அணி : ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சாய் சுதர்சன், ரஜத் படிதார், அபிஷேக் போரல் (WK), சூர்யகுமார் யாதவ், பி இந்திரஜித், ஹிருத்திக் ஷோக்கீன், மானவ் சுதர், உம்ரான் மாலிக், வைஷாக் விஜய்குமார், அன்ஷுல் கம்போஜ், ஹிமான்ஷு சவுகான், மயங்க் மார்கண்டே, மயங்க் மார்கண்டே (WK), சந்தீப் வாரியர்.

டி அணி : ஷ்ரேயாஸ் லியர் (சி), அதர்வா டைடே, யாஷ் துபே, தேவ்தத் படிக்கல், இஷான் கிஷன் (WK), ரிக்கி புய், சரண்ஷ் ஜெயின், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஆதித்யா தாகரே, ஹர்ஷித் ராணா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சென்குப்தா, கே.எஸ். (WK), சௌரப் குமார்.

Story first published: Wednesday, August 14, 2024, 17:16 [IST]
Other articles published on Aug 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+