Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Duleep Trophy 2024 - ஈஸ்வரன் தலைமையிலான பி அணியின் பிளேயிங் லெவன்! ஆல் ரவுண்டர்கள் நிறைந்த பலமான அணி

மும்பை : இந்திய கிரிக்கெட் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் ரஞ்சி, இராணி கோப்பைக்கு பிறகு பிரதான தொடராக கருதப்படுவது துலீப் கோப்பையாகும். இந்த தொடரில் ஏ, பி, சி, டி என நான்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்திய அணி அடுத்த ஐந்து மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிருப்பதால் உள்ளூர் போட்டிகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வாய்ப்பு அளிக்க பிசிசிஐ யோசித்து வருகிறது.

மேலும் பல நட்சத்திர வீரர்களுக்கு பயிற்சி களமாக அமைய வேண்டும் என்பதற்காக ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ஹர்திக் தவிர மற்ற வீரர்கள் இந்த தொடரில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் இந்த நிலையில் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையில் பி அணி தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இதில் பிளேயிங் லெவன் என்ன? நட்சத்திர வீரர்கள் யார் யார் இருக்கிறார்கள்? என்பதை தற்போது பார்க்கலாம்.

Duleep Trophy 2024 cricket rishabh pant jadeja

இந்திய டெஸ்ட் அணியில் அபிமன்யு ஈஸ்வரன் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக பல நாட்கள் காத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவருடைய தலைமையில் இந்த அணி களமிறங்குகிறது. தொடக்க வீரர் என்பதால் அவர் முதல் வீரராக களம் இறங்குவார். அவருக்கு ஜோடியாக ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

மூன்றாவது வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தமிழக வீரருமான நாராயண ஜெகதீசன் விளையாடக்கூடும். நான்காவது வீரராக மும்பையைச் சேர்ந்த சர்பராஸ்கான் விளையாடக் கூடும். ஐந்தாவது வீரராக அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் விளையாடுவார்.

ஆறாவது வீரராக ஆல்ரவுண்டர் ஜடேஜா விளையாடக்கூடும். இதேபோன்று ஏழாவது வீரராக தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இடம்பெறுவார். எட்டாவது வீரராக முகம்மது சிராஜ், ஒன்பதாவது வீரராக யாஷ் தயால், பத்தாவது வீரராக முகேஷ் குமாரும் இடம் பெற கூடும். இதன் அடுத்து பதினோராவது வீரராக சாய் கிஷோர் அல்லது ராகுல் சாகர் இடம் பெற கூடும்.

பி அணியில் ஸ்டார் வீரர்களாக ஜெய்ஸ்வால், சர்பராஸ்கான், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர்,ஜடேஜா முஹம்மது சிராஜ் போன்ற பல வீரர்கள் இருக்கிறார்கள். இதேபோன்று சாய் கிஷோர், முகேஷ் குமார், யாஷ் தயால், அபிமன்யு ஈஸ்வரன் போன்ற வீரர்களும் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் இந்த தொடரில் பி அணி பலமான ஒரு அணியாக விளங்குகிறது.

Story first published: Monday, August 26, 2024, 16:21 [IST]
Other articles published on Aug 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+