Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Duleep Trophy 2024 - ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டி அணி பிளேயிங் லெவன்.. சாதிக்குமா இளம் படை?

மும்பை : பொதுவாக ஒவ்வொரு விளையாட்டிலும் அதிகமாக அறியப்படாத ஒரு அணி இருக்கும். ஆனால் அதில் பல திறமை வாய்ந்த வீரர்கள் வெளியே அறியப்படாமல் இருப்பார்கள். அப்படி இருக்கும் அணியை ஆங்கிலத்தில் டார்க் ஹார்ஸ் ( Dark horse) அண்டர் டாக் ( under dog) போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி புகழ்வார்கள்.

அப்படி வரும் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ள துலீப் கோப்பையில் ஒரு under dog அணியாக களமிறங்குகிறது ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டி அணி. இதில் பல இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Duleep Trophy 2024 cricket Shubman gill shreyas iyer

ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற சீனியர் வீரர்களும் தங்களுடைய இடத்தை மீண்டும் பிடிக்க வேண்டும் என முயற்சி செய்து வரும் நிலையில், டி அணி எப்படி இருக்கிறது என்று தற்போது பார்க்கலாம். இதில், தொடக்க வீரராக இளம் வீரர்கள் அதர்வா தாய்டே மற்றும் யாஷ் துபே ஆகிய வீரர்கள் களமிறங்க கூடும். மூன்றாவது வீரராக தேவுதட் படிக்கல்லுக்கு வாய்ப்பு கிடைக்கும்
என எதிர்பார்க்கப்படுகிறது.

நான்காவது வீரராக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடக்கூடும். ஐந்தாவது வீரராக இசான் கிஷனும், ஆறாவது வீரராக கே எஸ் பரத் அல்லது ரிஷி பியூ விளையாடப்படும். ஏழாவது வீரராக அக்சர் பட்டேல், எட்டாவது வீரராக ஆர்ஸ்தீப் சிங், ஒன்பதாவது வீரராக ஹர்ஷித்ரானா, பத்தாவது வீரராக துசர் தேஷ்பாண்டே 11 வது வீரராக சவுரப்குமார் ஆகியோர் விளையாடக்கூடும்.

இதில் இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் பட்டேல், ஆர்ஸ்தீப் சிங், ஹர்ஷித்ராணா தேஷ்பாண்டே போன்ற வீரர்கள் தேர்வுக் குழுவினரின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்வார்கள். டி அணி தங்களுடைய முதல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சி அணியை எதிர்கொள்கிறது. இதை தொடர்ந்து செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் ஏ அணியை டி அணி எதிர்கொள்கிறது.

Story first published: Monday, August 26, 2024, 16:46 [IST]
Other articles published on Aug 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+