Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியின் 20 ஆண்டுக்கால சாதனையை சமன் செய்த துருவ் ஜூரல்! துலீப் கோப்பையில் அபாரம்

மும்பை : இந்திய அணி அடுத்த இரண்டு மாதத்தில் சொந்த மண்ணில் விளையாட போகும் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக யார் வரப் போகிறார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. பண்ட் இல்லாத நிலையில் தமக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி துருவ் ஜூரல் அசத்தினார்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஜூரலின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது. இதேபோல் கே எல் ராகுலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாடக்கூடிய திறமையை உடையவர். இந்த சூழலில் பண்ட் தற்போது கிரிக்கெட் களத்திற்கு திரும்பி தன்னுடைய பார்மையும் நிரூபித்து விட்டார்.

duleep trophy 2024 rishabh pant

இதனால் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் எந்த விக்கெட் கீப்பருக்கு வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் தான் துலீப் கோப்பை தொடரில் இந்திய ஏ அணிக்காக விளையாடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜூரல் தோனியின் 20 ஆண்டுகால சாதனையை சமன் செய்திருக்கிறார்.

துருவ் ஜூரல் பேட்டிங்கில் கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணிக்காக விளையாடிய அவர் வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து முதல் இன்னிங்ஸின் ஆட்டம் இழந்தார். எனினும் பேட்டிங்கில் கோட்டை விட்டதை விக்கெட் கீப்பிங்கில் துருவ் ஜூரல் சிறப்பாக செயல்பட்டு அசத்தி இருக்கிறார். குறிப்பாக இந்திய பி அணி வீரர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய போது துருவ் ஜூரல், விக்கெட் கீப்பராக ஏழு கேட்ச்களை பிடித்து அசத்தி இருக்கிறார்.

இதன் மூலம் தோனியின் மகத்தான சாதனையை அவர் சமன் செய்திருக்கிறார். இதன்மூலம் துலீப் கோப்பை தொடரில் ஒரே இன்னிங்சில் அதிக கேட்ச்களை பிடித்த கிரிக்கெட் என்ற தோனியின் 20 ஆண்டுகால சாதனையை துருவ் ஜூரல் சமன் செய்திருக்கிறார். கடந்த 2004 -2005 ஆம் ஆண்டு துலீப் கோப்பை தொடரில் கிழக்கு மண்டலம் அணிக்காக விளையாடிய தோனி ஏழு காட்சிகளை பிடித்தது சாதனையாக இருந்தது.

இதற்கு முன்பாக 1973- 74 ஆம் ஆண்டு சீசனில் மத்திய மண்டலம் அணிக்காக விளையாடிய சுனில் பெஞ்சமின் என்பவர் ஒரே இன்னிங்ஸில் ஆறு கேட்ச்களை பிடித்திருந்தார். அதன் பிறகு தெற்கு மண்டலம் அணிக்காக விளையாடிய சதானந்த் விஸ்வநாத் என்ற வீரர் ஒரே இன்னிங்ஸில் ஆறு கேட்ச்களை பிடித்து இருக்கிறார்.

இந்த நிலையில் துருவ் ஜுரல் இரண்டாவது இன்னிங்ஸில் ரன்கன் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோல்டன் டக் ஆகி வெளியேறினார். கில், ரியான் பராக், துருவ் ஜூரல் போன்ற வீரர்கள் இந்திய ஏ அணியில் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்து விட்டார்கள். இதனால் 275 ரன்கள் என்று இலக்கை எட்ட முடியாமல் இந்திய ஏ அணி தடுமாறி வருகிறது. கே.எல் ராகுல் மட்டும் 101 பந்துகளில் 50 ரன்கள் பூர்த்தி செய்து இருக்கிறார்.

Story first published: Sunday, September 8, 2024, 15:00 [IST]
Other articles published on Sep 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+