Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா இல்லனா என்ன! கம்பேக் கொடுக்கும் 24 வயது வீரர்.. கம்பீர் பாஸ் பிளான்..இத்தனை பேருக்கு வாய்ப்பா

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்றிருக்கும் கம்பீர் துலீப் கோப்பையை வைத்து ஒரு மாஸ் திட்டத்தை தீட்டி இருக்கிறார். அதாவது இந்திய அணி வரும் செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை சுமார் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

இதில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கின்றது.
டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் பந்துவீச்சாளர்கள் எதிரணியின் 20 விக்கெட்டுகளை எடுப்பது மிகவும் முக்கியம்.

cricket Duleep Trophy Virat kohli

தற்போது இந்தியாவின் தலைசிறந்த பவுலராக பும்ரா மட்டும்தான் இருக்கின்றார். முகமது சமி காயம் காரணமாக கடந்த உலகக்கோப்பை தொடருக்கு பிறகு விளையாட வில்லை.தற்போது அவர் தனது உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்று வேகப்பந்துவீச்சாளர்கள் படையை உருவாக்க முயற்சி செய்து வருகிறது.

அதற்கு கம்பீர் துலீப் கோப்பையை பயன்படுத்தி இருக்கிறார். இந்த தொடரில் 24 வயதான காஷ்மீரை சேர்ந்த உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. உம்ரான் மாலிக் தனது வேகத்தை பயன்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது மீண்டும் அவருக்கு துலீப் கோப்பையில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இதில் அவர் சரியாக செயல்பட்டால் இந்திய அணிக்கு திரும்ப கூடும். அது மட்டுமில்லாமல் பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமத் ,ஆவேஷ் கான், யாஷ் தயால், முகமது சிராஜ் விஷக் விஜயகுமார், துசார் தேஷ் பாண்டே, ஹர்ஷித் ரானா உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்களும் இடம் பிடித்திருக்கிறார்கள். இந்த வீரர்கள் அனைவருமே அதி வேகமாக பந்து வீசி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கக் கூடியவர்கள்.

இதில் யார் சிறந்த பார்மில் இருக்கிறார்? யார் வெளிநாட்டு டெஸ்ட் போட்டியிருக்கு சரி வருவார் என்பதை தேர்வு செய்து இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க கம்பீர் பிளான் போட்டு இருக்கிறார். இதுவரை இருந்த பயிற்சியாளர்களில் யாரும் செய்யாத இந்த முயற்சியை கம்பீர் செய்திருப்பது ரசிகர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

Story first published: Wednesday, August 14, 2024, 20:30 [IST]
Other articles published on Aug 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+