Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொஞ்சம் கூட புரியல.. துலீப் கோப்பையில் கோலி, ரோகித்துக்கு ஓய்வு ஏன்? எச்சரிக்கை தந்த கவாஸ்கர்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணி வரிசையாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடப் போகும் நிலையில் எந்தவித பயிற்சியும் இல்லாமல் விராட் கோலி, ரோகித் சர்மா விளையாடுவது சரியா என முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

டி20 உலக கோப்பை முடிவடைந்த நிலையில் இந்திய அணி ஸ்டார் வீரர்கள் அனைவரும் ஓய்வில் இருந்தார்கள் இதனால் அவர்கள் ஜிம்பாப்வே தொடரில் களமிறங்கவில்லை. இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் கூட விராட் கோலி, ரோஹித் ஷர்மா விளையாடவில்லை.

cricket Gavaskar virat kohli

எனினும் ஒரு நாள் தொடரில் இருவரும் பங்கேற்றார்கள். அதன் பின் இந்தியா வரும் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த சூழலில் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி துலீப் கோப்பை தொடர் நடைபெறுகிறது. இதில் கில், ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ரிஷப் பந்த் போன்ற முன்னணி வீரர்கள் விளையாடுகின்றனர்.

ஆனால் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்களுக்கு இந்த தொடரில் இருந்து ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், விராட் கோலியும் ரோகித் சர்மாவும் துலீப் கோப்பையில் விளையாடறது எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. எனக்கு கொஞ்சம் கூட புரியவில்லை. உள்ளூர் போட்டிகளில் விளையாடி பயிற்சி பெறாமல் எப்படி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவ்விரு வீரர்களும் விளையாட முடியும்.

பயிற்சி இல்லாமல் நேரடியாக சர்வதேச கிரிக்கெட்டில் களம் இறங்கினால் காயம் ஏற்படும் அபாயம் இருக்கும். தற்போது தேர்வு குழுவுடன் தேர்வு செய்யாததால் இருவரும் பயிற்சி இல்லாமல் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார்கள். பும்ரா போன்ற ஒரு பவுலருக்கு ஓய்வு கொடுப்பது என்பதை புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் வேக பந்துவீச்சாளர்களின் முதுகு பகுதியில் காயம் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

இதனால் அவர்களை பத்திரமாக ஓய்வு கொடுத்து பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் பேட்ஸ்மேன்கள் இருவரும் இது போன்ற போட்டிகளில் பங்கேற்பதின் மூலம் தங்களுடைய பார்மை மீட்க முடியும். நீங்கள் எந்தவித விளையாட்டு எடுத்துக் கொண்டாலும், ஒரு வீரர் 30 வயதை தாண்டினால் தொடர்ந்து அவர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய உடல் தகுதி சிறப்பான முறையில் இருக்கும். கொஞ்சம் ஓய்வு எடுத்தாலும் கூட உடல் தசைகள் வலு இழந்து விடும். இதனால் மீண்டும் போட்டிகளில் விளையாடும் போது காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

Story first published: Monday, August 19, 2024, 16:48 [IST]
Other articles published on Aug 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+