Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேஎல் ராகுல், ஜடேஜாவை அவமானப்படுத்திய பிசிசிஐ.. இது எல்லாம் கொஞ்சம் கூட நியாயம் இல்ல

மும்பை : துலீப் கோப்பை தொடருக்கான நான்கு அணிகளை பிசிசிஐ அறிவித்திருக்கிறது. இந்திய உள்நாட்டு சீசன் தொடங்கப்படும் நிலையில் நடைபெறும் இந்த தொடரில் பல சர்வதேச வீரர்கள் விளையாடுகின்றனர். செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரில் நான்கு அணிகள் மோதுகின்றனர்.

இதில் கில், ருதுராஜ், சிவம் துபே ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் ரிஷப் பந்த் போன்ற வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது ஏ அணியில் கேப்டனாக கில்லும் பி அணியின் கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன், சி அணி கேப்டனாக ருதுராஜ், டி அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

cricket Duleep Trophy Virat kohli

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கே எல் ராகுல் இடம் பிடித்திருக்கிறார்.இதேபோன்று பி அணியில் நட்சத்திர வீரரான ஜடேஜா இடம் பிடித்திருக்கிறார். இந்த இரண்டு வீரர்களுக்குமே கேப்டன் பதவி கொடுக்காமல் சாதாரண வீரராக பிசிசிஐ அறிவித்திருப்பது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த ஆண்டு எல்லாம் ரோகித் சர்மா இல்லாத நிலையில் கே எல் ராகுல் தான் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் அடுத்த கேப்டனாக கேஎல் ராகுல் தான் செயல்படுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். தற்போது கே எல் ராகுலை கேப்டனாக மட்டுமல்லாமல் துலீப் கோப்பையில் கூட கேப்டன் பதவி வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராகுல் போன்ற ஒரு சீனியர் வீரர் கில்லுக்கு கீழ் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதேபோன்று ஜடேஜா இந்திய அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டராக கருதப்படுகிறார். ஜடேஜாவுக்கு இந்திய அணியில் கேப்டனாக செயல்பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் சிஎஸ்கே போன்ற அணிகளுக்கெல்லாம் தலைமை தாங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் ஜடேஜாவை கேப்டனாக நியமிக்காமல் பி அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் என்ற வீரரை கேப்டனாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதேபோன்று இந்திய t20 அணியின் கேப்டனாக இருக்கும் சூரியகுமார் யாதவ் சி அணியில் இருக்கிறார். ஆனால் அவருக்கும் கேப்டன் பதவி தரப்படவில்லை.

ஆனால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு டி அணியில் கேப்டன் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது.இப்படி சீனியர் வீரர்களை உள்ளூர் போட்டிக்கு கூட கேப்டனாக நியமிக்க செய்யாமல் பிசிசிஐ அவர்களுக்கு அநீதி இழைப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Story first published: Wednesday, August 14, 2024, 18:31 [IST]
Other articles published on Aug 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+