Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுப்மன் கில், ஸ்ரேயாஸ் கிடையாது.. துலீப் கோப்பை தொடரில் சிறந்த கேப்டன் திறனை காட்டியது இவர் தான்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவனான ரோகித் சர்மா,விராட் கோலி ஆகியோர் தங்களுடைய கடைசி கிரிக்கெட் அத்தியாயத்தில் இருக்கிறார்கள். ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி ஓய்வு பெற்ற நிலையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் தொடர்ந்து நீடித்து வருகிறார்கள்.

இந்த சூழலில் ரோகித் சர்மா வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பிறகு கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.

duleep trophy 2024 rishabh pant

இந்த சூழலில் துலீப் கோப்பை தொடரில் பல இளம் வீரர்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள். மேலும் இதில் புதிய கேப்டன்களை அடையாளம் காணும் பணியில் நான்கு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி இந்திய ஏ அணியின் கேப்டனாக கில், இந்திய பி அணியின் கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரனும், இந்திய சி அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாடும், இந்திய டி அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரும் செயல்பட்டு வருகிறார்கள்.

ஆனால் இந்த நான்கு கேப்டன்களுமே பெரிய அளவில் தன்னுடைய கவனத்தை ஈர்க்கவில்லை என்றும் அணியில் சாதாரண வீரராக விளையாடிய 26 வயது வீரர்தான் கேப்டனாக இல்லாமலும் தனது பணியை சிறப்பாக செய்வதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் டபிள்யூ வி ராமன் பாராட்டியுள்ளார். இந்திய ஏ மற்றும் இந்திய பி அணிக்கு இடையிலான போட்டியில் டபள்யூவி ராமன் கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது இந்திய பி அணியின் இடம்பெற்று இருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பண்ட், அந்த அணியின் பவுலரான நவதீப் ஷைனி உடன் அவ்வப்போது ரிஷப் பண்ட் எவ்வாறு பந்து வீச வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார். இதன்படி செயல்பட்ட நவதீப் சைனிக்கு மூன்று விக்கெட்டுகள் முதல் இன்னிங்சில் கிடைத்தது. குறிப்பாக அதிரடி வீரர் துருவ் ஜூரலுக்கு பந்து வீசும் போது ரிஷப் பண்ட், நவதீப் சைனியிடம் கிராஸ் சீம் வகையிலான பந்தை பயன்படுத்துமாறு கூறினார்.

அதேபோல் ஷைனி செயல்பட ஜூரல் விக்கெட்டுகள் கிடைத்தது. அப்போது வர்ணனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த டபுள்யூ வி ராமன் இந்த அணியில் யார் கேப்டன் என்பதில் முக்கியமில்லை. பண்ட் களத்தில் இருக்கும் போது ஒரு தலைவராக செயல்படுகிறார். ஒவ்வொரு ஓவர் இடைவெளியின் போதும் ரிஷப் பண்ட், பவுலர்களை அழைத்து சில அறிவுரைகளை கூறியிருக்கிறார்.

சைனிக்கு அவர் சில அறிவுரைகளை வழங்கினார். அது தற்போது சிறப்பாக செயல்பட்டு ஷைனிக்கு மூன்று விக்கெட்டுகள் கிடைத்து இருக்கிறது. இதனால் பண்ட் தலைமை பண்பு சிறப்பாக இருக்கிறது என்று டபுள்யூ வி ராமன் கூறியுள்ளார். ரிஷப் பண்ட் முதல் இன்னிங்சில் ஏழு ரன்கள் அடித்தாலும் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் 61 ரன்கள் விளாசினார். இதில் ஒன்பது பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் அடங்கும்.

Story first published: Sunday, September 8, 2024, 14:40 [IST]
Other articles published on Sep 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+