துலீப் கோப்பையில் தொடரும் சாபம்!அறிமுக போட்டியில் சதம் அடித்து,பெரிய அளவில் சாதிக்காதவர்கள் பட்டியல்
மும்பை : துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் அறிமுகப் போட்டியில் சதம் அடித்த வீரர்கள் பெரிய அளவில் யாருமே சாதித்தது கிடையாது என்ற தகவல் வெளியாகி உள்ளது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ரஞ்சி கோப்பை, இராணி கோப்பை போன்ற தொடர்களில் அறிமுக போட்டியில் சதம் அடித்திருக்கிறார்.
ஆனால் அவர் துலீப் கோப்பை தொடரின் அறிமுகப் போட்டியில் சதம் அடித்தது கிடையாது. ஆனால் அவர் கிரிக்கெட் உலகிலே மிகப்பெரிய வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். ஆனால் துலீப் கோப்பை தொடரில் அறிமுக போட்டியில் சதம் அடித்த வீரர்கள் யாருக்கும் பெரிய அளவில் வாய்ப்பே கிடைத்தது கிடையாது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அப்படி வாய்ப்பு கிடைத்தாலும் அவர்கள் பெரும் உச்சத்திற்கும் சென்றது கிடையாது. இது குறித்து தான் தற்போது நாம் பார்க்க உள்ளோம். இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் தமிழக கிரிக்கெட் வீரர் பாபா அப்ரஜித், துலீப் கோப்பையில் அறிமுகமாகி 212 ரன்கள் குவித்தார். இதன் மூலம் தெற்கு மண்டலம் அணி ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 600 ரன்கள் குவித்தது.

இந்த போட்டி சமனில் முடிவடைந்தது. ஆனால் பாபா அப்ரஜித் தொடர்ந்து தன்னுடைய திறமையை நிரூபித்தாலும், இதுவரை ஒரு முறை கூட அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடியது கிடையாது. இன்னும் தன்னுடைய முதல் வாய்ப்புக்காக அவர் போராடி வருகிறார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் வினோத் காம்பிளி. வினோத் காம்ப்ளி தன்னுடைய துலீப் கோப்பை அறிமுக போட்டியில் இரட்டை சதம் விளாசினார்.

ஆனால் வினோத் காம்ப்ளி இந்திய அணிக்காக வெறும் 17 டெஸ்ட் போட்டிகள் தான் விளையாடி இருக்கிறார். இதில் 1084 ரன்கள் அடங்கும். சராசரி 54 ஆகும். இவ்வளவு சிறப்பான ரெக்கார்டை வைத்திருந்தாலும் பல்வேறு காரணங்களால் வினோத் காம்பிளி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் போனார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் டெல்லி வீரரும் அண்டர் 19 உலக கோப்பையில் வென்ற யாஷ் தூல்.

வடக்கு மண்டல அணியில் களமிறங்கியஇவர் அறிமுக போட்டியிலே 193 ரன்கள் குவித்தார். இந்த போட்டி சமனில் தான் முடிந்தது. யாஸ் தூல், இதுவரை 23 முதல் தர போட்டிகளில் விளையாடி 1610 ரன்கள் அடித்திருக்கிறார். ஆனால் அவரும் இன்னும் இந்திய அணிக்காக விளையாடவில்லை. அது மட்டும் அல்லாமல் இதயத்தில் கோளாறு ஏற்பட்டதால் அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப போராடி வருகிறார்.

இப்படி மூன்று வீரர்களுமே துலீப் கோப்பையில் அறிமுக ஆட்டத்தில் சதம் அடித்து பின் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் தடுமாறி இருக்கிறார்கள். இந்த பட்டியலில் முஷீர்கான் சேர்வாரா இல்லை அவர் இந்த சாபத்தை உடைப்பாரா என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications