Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜடேஜா, சிராஜ் நீக்கம்.. அதிவேக பவுலருக்கும் இடம் இல்லை.. பிசிசிஐ அறிவிப்பு.. துலீப் ட்ராபி மாற்றம்

மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய வீரர்கள் பங்கேற்கும் உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் டிராபி தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நான்கு அணிகளில் இருந்து மூன்று வீரர்களை நீக்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் அனுபவ சுழற் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரையும் இந்தியா பி அணியில் இருந்து நீக்கி இருக்கிறது பிசிசிஐ. மேலும், இந்தியா சி அணியில் இருந்து அதிவேக வேகப் பந்துவீச்சாளரான உம்ரான் மாலிக்கை நீக்கி உள்ளது.

duleep trophy 2024 ravindra jadeja india

உம்ரான் மாலிக் மற்றும் முகமது சிராஜ் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களால் முதல் போட்டி துவங்குவதற்குள் தங்கள் உடற் தகுதியை நிரூபிக்க முடியாது என்பதாலும் அவர்கள் நீக்கப்பட்டதாக பிசிசிஐ கூறி உள்ளது. ஓய்வு அளிக்க வேண்டி ரவீந்திர ஜடேஜா இந்தியா பி அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். முன்னதாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு மட்டுமே துலீப் டிராபி தொடரில் விளையாடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது ரவீந்திர ஜடேஜாவுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

துலீப் டிராபியில் பங்கேற்க உள்ள நான்கு அணிகள் விவரம் -

இந்தியா ஏ: சுப்மன் கில் (கேப்டன்), மயங்க் அகர்வால், ரியான் பராக், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), கே எல் ராகுல், திலக் வர்மா, சிவம் துபே, தனுஷ் கோட்டியான், குல்தீப் யாதவ், ஆகாஷ்தீப், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, ஆவேஷ் கான், வித்வத் கவேரப்பா, குமார் குஷாக்ரா, ஷஸ்வத் ராவத்.

இந்தியா பி: அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), முஷீர் கான், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, யாஷ் தயால், முகேஷ் குமார், ராகுல் சாஹர், ஆர் சாய் கிஷோர், மோஹித் அவஸ்தி, என் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்).

இந்தியா சி: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சாய் சுதர்சன், ரஜத் படிதார், அபிஷேக் போரல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், பாபா இந்திரஜித், ஹிருத்திக் ஷோக்கீன், மானவ் சுதர், கௌரவ் யாதவ், வைஷாக் விஜய்குமார், அன்ஷுல் கம்போஜ், ஹிமான்ஷு சவுகான், மயங்க் மார்கண்டே, ஆர்யன் ஜுயால் (விக்கெட் கீப்பர்), சந்தீப் வாரியர்.

இந்தியா டி: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அதர்வா டைடே, யாஷ் துபே, தேவ்தத் படிக்கல், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரிக்கி புய், சரண்ஷ் ஜெயின், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஆதித்யா தாகரே, ஹர்ஷித் ராணா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சென்குப்தா, பாரத். (விக்கெட் கீப்பர்), சௌரப் குமார்.

Story first published: Tuesday, August 27, 2024, 16:55 [IST]
Other articles published on Aug 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+