Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Duleep Trophy 2024 - ருதுராஜ் தலைமையிலான சி அணி பிளேயிங் லெவன்.. பல அதிரடி வீரர்களுக்கு வாய்ப்பு

மும்பை : இந்திய கிரிக்கெட் அணி இன்னும் இரண்டு மூன்று வாரத்திற்கு எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ஆனால் சர்வதேச கிரிக்கெட் இல்லை என்றாலும் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக துலீப் கோப்பைத் தொடர் நடைபெறுகிறது.

இதில் முன் எப்போதும் போல் இல்லாத அளவில் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை தவிர பெரும்பாலான வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்கிறார்கள். இந்த நிலையில் ருதுராஜ் தலைமையில் சி அணி தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இதில் எந்தெந்த ஸ்டார் வீரர்கள் இருக்கிறார்கள்.

Duleep Trophy 2024 cricket Shubman gill ruturaj gaikwad

இதன் பிளேயிங் லெவன் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். தொடக்க வீரராக சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக போராடி வருவதால் அவருக்கு இந்த தொடர் ஒரு வரப் பிரசாதமாக பார்க்கப்படுகிறது. அவருக்கு ஜோடியாக தமிழக வீரர் சாய் சுதர்சன் களம் இறங்குவார்.

அதேபோன்று மூன்றாவது வீரராக ஆர் சி பி அணியின் ரஜத் பட்டி தாருக்கு வாய்ப்பு கிடைக்கும். இதேபோன்று நான்காவது வீரராக t20 இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் விளையாடுவார். ஏற்கனவே ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என போராடி வருவதால் அவருக்கு மீண்டும் துலீப் கோப்பை ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

ஐந்தாவது வீரராக தமிழகத்தைச் சேர்ந்த பாபா இந்திரஜித்துக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆறாவது வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் அதிரடி வீரருமான அபிஷேக் போரெல் விளையாட கூடும். ஏழாவது வீரராக இனம் சுழற் பந்துவீச்சாளர் மானவ் சுதார் விளையாடக்கூடும். எட்டாவது வீரராக மும்பை அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் மாயங் மார்க்கண்டேவுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

ஒன்பதாவது வீரராக காஷ்மீரை சேர்ந்த நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கும் பத்தாவது வீரராக ஆர் சி பி இல் விளையாடிய வியாஷம் விஜயகுமாருக்கும் 11-வது தமிழக ரஞ்சி அணியில் விளையாடும் சந்தீப் வாரியருக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். இதேபோன்று ஹிமான்சு சவுகான் என்ற இளம் வயது வேக பந்துவீச்சாளும் தனது வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

Story first published: Monday, August 26, 2024, 16:32 [IST]
Other articles published on Aug 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+