For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

துலீப் கோப்பையில் சதம் விளாசிய தமிழக வீரர்..இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற வாய்ப்பு.. ராகுலுக்கு செக்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணி தற்போது அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் ஸ்டார் வீரர்கள் யாருக்காவது காயம் ஏற்பட்டாலோ, அல்லது ஃபார்ம் இன்றி தவித்தாலோ அவர்களுக்கு பதில் மாற்று வீரர்கள் நிச்சயம் தேவைப்படுவார்கள்.

அப்படிப்பட்ட மாற்று வீரர்களை கண்டறிவதற்காக துலீப் கோப்பை தொடர் அண்மையில் நடைபெற்றது. இதில் இந்தியாவில் உள்ள இளம் நட்சத்திர வீரர்கள் பலரும் பங்கேற்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார்.

duleep trophy 2024 india sai sudharsan

மூன்று போட்டிகளில் விளையாடி உள்ள சாய் சுதர்சன் 6 இன்னிங்ஸில் 211 ரன்கள் சேர்த்து இருக்கிறார். அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் சாய் சுதர்சன் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறார். பொதுவாக இது போன்ற உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் எவ்வளவு ரன்கள் அடிக்கிறார்கள் என்பதை பார்ப்பதைவிட அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள். எந்த ஷாட்டை பயன்படுத்துகிறார்கள்.

நெருக்கடியை சமாளிக்கும் திறன் பேட்ஸ்மேனுக்கு இருக்கிறதா? அணியை தனியாக காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறாரா போன்ற குணாதிசயங்களை தான் தேர்வு குழுவினர் பார்ப்பார்கள். அப்படி பார்க்கும்போது சாய் சுதர்சன் இது அனைத்திலுமே பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார். கடைசி ரவுண்டு போட்டியில் இந்தியா ஏ மற்றும் இந்தியா சி அணிகள் மோதின.

இது இந்திய சி அணிக்காக சாய் சுதர்ஷன் களம் இறங்கினார். முதல் இன்னிங்சில் 291 ரன்கள் எடுக்க, இந்திய சி அணி 234 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய ஏ அணி 286 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் இந்திய சி அணி களமிறங்கியது.

கேப்டன் ருதுராஜ் 44 ரன்களில் ஆட்டம் இழக்க, விஜயகுமார் விசாய்க் 17 ரன்கள் எடுத்தார். இசான் கிஷன், அபிஷேக் போரெல் ஆகியோர் எல்லாம் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஆனால் தனி ஆளாக நின்று சாய் சுதர்சன் மட்டும் போராடினார். நேற்று இந்திய சி அணியில் இரண்டாவது இன்னிங்சில் மொத்தம் ஏழு வீரர்கள் ஒற்றை இலக்கம் ரன்கள் மட்டும் தான் எடுத்திருந்தார்கள். முதல் விக்கெட் பிறகு வந்தவர்கள் எல்லாம் பெவிலியன் நோக்கி அணிவகுப்பு நடத்த சாய் சுதர்சன் மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஒரு கட்டத்தில் அணியை சாய் சுதர்சன் வெற்றிக்கு அழைத்து செல்வார் என எதிர்பார்க்கப்பட்டதும் 206 பந்துகளை எதிர்கொண்ட சாய் சுதர்சன் 111 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதில் 12 பவுண்டரிகள் அடங்கும். சாய் சுதர்சன் ஆட்டம் இழந்ததால், இந்திய சி அணி 217 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சாய் சுதர்சன் களத்தில் தனியாக போராடிய விதம் தேர்வு குழுவினரை மிகவும் கவர்ந்திருக்கிறது. ஏற்கனவே சாய் சுதர்சன் தன்னுடைய திறமையை ஐபிஎல், இந்தியா ஏ போன்ற தொடர்களில் நிரூபித்து இருக்கிறார்.

இதனால் சாய் சுதர்சனுக்கு விரைவில் இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கலாம். கேஎல் ராகுல் தடுமாறினால் அவருக்கு பதில் இடது கை பேட்ஸ்மனாக சாய் சுதர்சன் வரலாம் என்று கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் சாய் சுதர்சன் லெக் பிரேக் வகையிலான சுழற் பந்து வீச்சையும் வீசுவார். இதனால் அவரிடம் இருந்து சில ஓவர்களை கூட வெளிநாட்டு மண்ணில் கேப்டன்கள் பெற முடியும். இதனால் தமிழகத்தில் இருந்து விரைவில் ஒரு பேட்ஸ்மேன் இந்திய அணியில் ஜொலிப்பார்.

Story first published: Monday, September 23, 2024, 12:37 [IST]
Other articles published on Sep 23, 2024
English summary
Duleep Trophy 2024- Sai sudharsan Fighting century caught the eye of selectors துலீப் கோப்பையில் சதம் விளாசிய தமிழக வீரர்..இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற வாய்ப்பு.. ராகுலுக்கு செக்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+