Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கம்பீரையும், அகார்கரையும் கடுப்பேற்றிய ஸ்ரேயாஸ் ஐயர்.. இனி டெஸ்ட் பக்கம் வந்து விடாதீர்கள்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணி அடுத்த இரண்டு மாதங்களில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்காக வீரர்களை தேர்வு செய்யும் நோக்கில் துலீப் கோப்பை தொடரில் ஸ்டார் வீரர்களை தேர்வு குழுவினர் விளையாட வைத்திருக்கிறார்கள்.

அதன்படி இந்திய அணியில் இடம் வேண்டும் என்றால் தங்களுடைய திறமையை துலீப் கோப்பையில் நிரூபிக்க வேண்டும் என தேர்வு குழுவின் தலைவருமான அகார்கர் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் அறிவுறுத்தி இருந்தார்கள்.

duleep trophy 2024 shreyas iyer rishabh pant

இந்த நிலையில் சுப்மன் கில், ரிஷப் பன்ட், ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், அக்சர் பட்டேல் போன்ற முன்னணி வீரர்கள் துலீப் கோப்பை தொடரில் பங்கேற்று இருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய டெஸ்ட் அணியில் முக்கிய வீரராக இருந்த நிலையில் போதிய ஃபார்ம் இல்லாத காரணமாக அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.

இந்த சூழலில் சர்ப்ரைஸ் கான் துருவ் ஜூரல், டேவுதட் படிக்கல் போன்ற வீரர்கள் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருக்கிறார்கள். இதனால் இழந்த இடத்தை மீண்டும் பிடிப்பதற்காக தற்போது உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் சென்னையில் நடைபெற்ற புஜி பாபு கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக ஸ்ரேயாஸ் விளையாடி கடுமையாக சொதப்பினார்.

இந்த நிலையில் துலீப் கோப்பை தொடரில் இந்திய டி அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயஎ நியமிக்கப்பட்டார். அவர் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி ரன் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய சி அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கிய ஸ்ரேயாஸ், 16 பந்துகளை எதிர் கொண்டு வெறும் ஒன்பது ரன்களில் ஆட்டம் இழந்தார்.

விஜயகுமார் விசாய்க் பந்து வீச்சில் அவர் தன்னுடைய விக்கெட்டை இழந்தார். அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்திருப்பது தேர்வு குழுவினரை கடுப்படைய செய்திருக்கிறது. ஏற்கனவே இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் தேவை என ஸ்ரேயாஸ் மீது அஜித் அகார்கர் அதிக நம்பிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது அவர் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்.

இதனால் அடுத்த இரண்டாவது இன்னிங்ஸில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் ஸ்ரேயாஸ் இருக்கிறார். அண்மையில் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கூட ஸ்ரேயாஸ், பேட்டிங்கில் சொதப்பினார். இதனால் ஸ்ரேயாஸ்,ஒருநாள் கிரிக்கெட்டிலும் தன்னுடைய இடத்தை இழக்க நேரிடும். இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் தன்னுடைய பார்மை பெற வேண்டும் என அவருடைய ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Story first published: Thursday, September 5, 2024, 14:35 [IST]
Other articles published on Sep 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+