Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எதிர்பார்த்த படி நான் விளையாடவில்லை! இம்முறை சரி செய்துவிடுவேன்..டெஸ்ட் போட்டி குறித்து சுப்மன் கில்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணி அடுத்த இரண்டு மாதங்களில் சொந்த மண்ணில் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளும் அடங்கும்.

இந்த தொடருக்கு தயாராகும் வகையில் தற்போது துலீப் கோப்பை நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் கில், கே எல் ராகுல், ரிஷப் பண்ட் போன்ற நட்சத்திர வீரர்கள் பங்கேற்கின்றன. இந்த நிலையில் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் மூன்றாவது வீரராக களமிறங்க போகிறேன் என்று முடிவு எடுத்திருந்தார்.

duleep trophy 2024 shubman gill rishabh pant

ஆனால் நம்பர் மூன்றாவது இடத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கில் எதிர்பார்த்த அளவு விளையாடவில்லை. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கடைசி சில போட்டிகளில் அபாரமாக விளையாடி கிட்டத்தட்ட 500 ரன்கள் குவித்தார். இந்த நிலையில் கில் அடுத்தடுத்து நடைபெற உள்ள டெஸ்ட் போட்டிக்கு தான் எவ்வாறு தயாராக இருக்கு என்பது குறித்து பேசி இருக்கிறார்.

அதனை தற்போது பார்க்கலாம். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக பந்தை தற்காக்கும் முறையை நான் கற்றுக் கொண்டிருக்கின்றேன். சுழற் பந்துவீச்சு அவர்களுக்கு சாதகமாக இருக்கும் மைதானத்தில் விளையாடும் போது நாம் பந்தை சரியான முறையில் தற்காக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே உங்களால் ஆட்டம் இழக்காமல் இருக்க முடியும்.

அதே சமயம் உங்களால் ரன் சேர்க்கவும் முடியும். தற்போது டி20 போட்டிகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இது அனைத்தும் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் நடக்கிறது. இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் ரன் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே தற்காத்து ஆடும் முறையை பலரும் கைவிட்டு விடுகிறார்கள்.

எனவே பந்தை தற்காத்து ஆடும் டெக்னிக்கை கவனம் செலுத்தி விளையாட வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை என் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்புக்கு இணையாக என்னால் விளையாட முடியவில்லை. ஆனால் இந்த சீசனில் தொடர்ந்து பத்து டெஸ்ட் போட்டிகள் விளையாடப் போகிறோம். இந்த பத்து டெஸ்ட் போட்டிகளையும் நான் எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்.

இந்த பத்து டெஸ்ட் போட்டிகளிலும் என் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யும் வகையில் நான் விளையாடுவேன் என்று தெரிவித்திருக்கிறார்.இந்தியா வங்காளதேசம் அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. கில் ஏற்கனவே சென்னையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாடி இருக்கிறார். அதில் அவருடைய ஸ்கோர் 29,50,0, 14 ரன்கள் ஆகும்.

Story first published: Wednesday, September 4, 2024, 16:38 [IST]
Other articles published on Sep 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+