மும்பை : இந்திய கிரிக்கெட்டில் உள்நாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்குகிறது. இந்த உள்ளூர் போட்டிகளில் முதலில் நடைபெறுவது துலீப் கோப்பை தொடராகும். பொதுவாக வடக்கு, தெற்கு என நான்கு மண்டலங்கள் பிரிக்கப்பட்டு அதிலிருந்து வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இம்முறை நான்கு அணிகள் ஏ,பி,சி டி என பிரிக்கப்பட்டு அனைத்து பகுதிகளிலும் இருந்து அணிகள் கலந்து தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் டீம் ஏ அணியின் கேப்டனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இதில் பிளேயிங் 11 என்ன?கில் யார் யாரை தேர்வு செய்வார்? இந்த அணியில் இருக்கும் நட்சத்திர வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

இந்த அணியில் கில் நம்பர் மூன்றாவது வீரராக களமிறங்கவே அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இந்திய அணியில் தற்போது அவர் மூன்றாவது வீரராக தான் விளையாடுகிறார். இதனால் தொடக்க வீரராக மாயங் அகர்வால் மற்றும் திலக் வர்மா விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது. நான்காவது வீரராக இந்திய அணியின் நட்சத்திர வீரராக கே எல் ராகுல் இடம் பெறுவார்.
ஐந்தாவது வீரராக இளம் நட்சத்திரம் ரியான் பராக்கிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. ஆறாவது வீரராக கடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட துருவ் ஜூரலுக்கு வாய்ப்பு வழங்கப்படும். ஏழாவது வீரராக சிவம் துபே விளையாட கூடும் எட்டாவது வீரராக குல்தீப் யாதவ் அணியில் இருப்பார். ஒன்பதாவது வீரராக பிரசித் கிருஷ்ணா, பத்தாவது வீரராக கலீல் அகமத், 11-வது வீரராக அவேஷ் கான் செயல்பட வாய்ப்பு இருக்கிறது.
ஒருவேளை சிவம் துபேக்கு பதிலாக தானுஷ் கோடியான் என்ற சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஐந்தாம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் டீம் ஏ, பி அணியை எதிர்கொள்கிறது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது சுற்றில் பி அணியை கில் தலைமையிலான அணியே எதிர்கொள்கிறது. இந்த அணியில் கே எல் ராகுல், கில், மாயங் அகர்வால், ரியான் பராக் மற்றும் ஆவேஷ் கான்,கலீல் அகமது ஆகியோர் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை தேர்வுக்குழு கவனிப்பார்கள்.