Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

துலீப் கோப்பை- MI அணியின் குட்டி ரெய்னா ஏமாற்றம்.. 93 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்த இந்தியா ஏ!

மும்பை : துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது சுற்றில் இந்திய ஏ அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களின் ஆட்டம் இழந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரும் அடுத்த சுரேஷ் ரெய்னா என்று ரசிகர்களால் போற்ற வந்த திலக் வருமா 10 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

21 வயதான திலக் வர்மா நான்கு சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலும் 16 சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாட இருக்கிறார். இதில் ஒரு நாள் போட்டியில் அவர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதில் ஒரே ஒரு அரைசதம் மட்டும் தான் அவர் அடித்திருந்தார்.

duleep trophy 2024

t20 கிரிக்கெட்டை பொருத்தவரை அவர் இதுவரை இரண்டு அரை சதம் அடித்திருக்கிறார். 16 போட்டிகளில் அவர் 333 ரன்கள் அடித்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் தன்னுடைய திறமையை ஏற்கனவே வெளிப்படுத்தி இருந்த திலக் வர்மா கடந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பல சீனியர் வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருந்ததால் இந்திய அணியில் அவரால் இடம்பெற முடியவில்லை. இதை அடுத்து இந்திய அணியில் பெரிய அளவில் திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசியாக அவர் ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடினார். அதன் பிறகு இந்திய அணியில் தொடர்ந்து திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த சூழலில் துலீப் கோப்பை தொடரில் இடம் பெற்ற திலக் வர்மா முதல் ரவுண்டு ஆட்டத்தில் விளையாடவில்லை. இந்த சூழலில் இரண்டாவது ரவுண்டு ஆட்டத்தில் திலக் வர்மாவுக்கு வாய்ப்புஇ கிடைத்தது. எனினும் அதில் அவர் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 33 பந்துகளை எதிர் கொண்டு 10 ரன்களில் வெளியேறினார்.

இதேபோன்று ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான தொடர்களில் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்ட ரியான் பராக், அதிரடியாக விளையாடும் முற்பட்டு 37 ரன்களில் ஆட்டம் இழந்தார். அவர் 29 பந்துகளில் ஐந்து பவுண்டரி ஒரு சிக்சர் விளாசி இருந்தார். அவர் கொஞ்சம் பொறுமை காத்திருந்தால் பெரிய ஸ்கோர் அடித்திருக்கலாம். ஆனால் அதிரடி காட்டிய நிலையில் ஆர்ஸ்தீப் சிங் ஒவரில் அவர் திரும்பினார்.

ஒரு கட்டத்தில் இந்திய ஏ அணி 93 ரன்கள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் சாம்ஸ் முலானின் மற்றும் டனுஷ் கொட்டியான் ஆகியோர் அபாரமாக விளையாடி இந்திய ஏ அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்திய டி அணியின் பந்துவீச்சு தரப்பில் ஹர்ஷித் ரானா ஒரு விக்கெட் ஆர்ஸ்தீப் சிங், காவேரப்பா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்கள்.

Story first published: Thursday, September 12, 2024, 15:38 [IST]
Other articles published on Sep 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+