Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Duleep Trophy 2024 - எந்த சேனலில் , ஓடிடியில் பார்ப்பது? நேரம் என்ன? 4 அணிகள் வீரர்கள் விவரம்

மும்பை : துலீப் கோப்பை 2024 ஆம் ஆண்டு சீசன் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 6 போட்டிகள் நடைபெறுகிறது. முதலில் மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டு ஆறு அணிகள் பங்கு பெறும்.தற்போது இது நான்கு அணிகளாக குறைக்கப்பட்டு ஏ,பி, சி, டி என அனைத்து அணிகளிலும் அனைத்து பகுதிகளில் இருந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு இரண்டு புள்ளிகளும் டிரா அடையும் அணிக்கு ஒரு புள்ளிகளும் வழங்கப்படுகிறது. நான்கு அணிகளும் தங்களுக்குள் ஒருமுறை மோதிக் கொள்ளும். இதில் அதிக புள்ளிகள் பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வென்றதாக அறிவிக்கப்படுவார்கள்.இந்திய கிரிக்கெட்டின் பிரதான உள்நாட்டுப் போட்டிகள் தொடங்க நிலையில் முதல் தொடராக துலீப் கோப்பை நடைபெறுகிறது.

duleep trophy 2024

அது மட்டுமல்லாமல் இந்தியா வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து ஜனவரி மாதம் வரை 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதனால் டெஸ்ட் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக துலீப் கோப்பையில் கில், ரிஷப் பந்து, கே எல் ராகுல் போன்ற நட்சத்திர வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்கிறார்கள்.

இதில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்கள் இந்திய அணிக்கு விளையாட வாய்ப்பு இருக்கிறது. இந்த துலீப் கோப்பையை இலவசமாக ஜியோ சினிமா ஆப்பில் பார்க்கலாம். அது மட்டுமல்லாமல் தொலைக்காட்சியில் ஸ்போர்ட்ஸ் 18 நெட்வொர்க்கில் இந்த போட்டிகளை பார்க்க முடியும். துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆந்திராவில் உள்ள அனந்தன் பகுதியில் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் இந்த தொடரில் பங்குபெறும் அணிகளின் விவரங்களை தற்போது பார்க்கலாம்.

duleep trophy 2024

இந்தியா ஏ: சுப்மான் கில் (கேப்டன்), மயங்க் அகர்வால், ரியான் பராக், துருவ் ஜூரல் (டபிள்யூ.கே), கே.எல். ராகுல், திலக் வர்மா, ஷிவம் துபே, தனுஷ் கோட்டியான், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, அவேஷ் கான், வித்வத் கவேரப்பா , குமார் குஷாக்ரா, ஷஸ்வத் ராவத்.

இந்தியா பி: அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (டபிள்யூ.கே), முஷீர் கான், நிதிஷ் குமார் ரெட்டி*, வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, யாஷ் தயால், முகேஷ் குமார், ராகுல் சாஹர், ஆர் சாய் கிஷோர், மோஹித் அவஸ்தி , என் ஜெகதீசன் (WK).

இந்தியா C: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சாய் சுதர்சன், ரஜத் படிதார், அபிஷேக் போரல் (WK), பி இந்திரஜித், ஹிருத்திக் ஷோக்கீன், மானவ் சுதர், கௌரவ் யாதவ், வைஷாக் விஜய்குமார், அன்ஷுல் கம்போஜ், ஹிமான்ஷு சவுகான், மயங்க் மார்கண்டே, ஆர்யன் ஜூயல் (WK) , சந்தீப் வாரியர்.

இந்தியா D: ஷ்ரேயாஸ் லியர் (கேப்டன்), அதர்வா டைடே, யாஷ் துபே, தேவ்தத் படிக்கல், இஷான் கிஷன் (WK), ரிக்கி புய், சரண்ஷ் ஜெயின், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஆதித்யா தாகரே, ஹர்ஷித் ராணா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சென்குப்தா, பாரத். (WK), சௌரப் குமார்.

Story first published: Tuesday, September 3, 2024, 23:24 [IST]
Other articles published on Sep 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+