Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

துலீப் கோப்பை 2025.. ஹாட்ரிக் சாதனை படைத்த காஷ்மீர் வீரர்.. என்ன மாதிரி பவுலிங் சார்!

பெங்களூர்: துலீப் கோப்பை தொடரின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் நார்த் ஜோன் அணியில் இடம் பிடித்திருந்த காஷ்மீர் வீரர் அக்யூப் நபி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். மேலும் ஹாட்ரிக் சாதனையையும் அவர் நிகழ்த்தினார். பெங்களூருவில் நடைபெற்ற நார்த் ஜோன்,ஈஸ்ட் ஜோன் அணிகளுக்கு இடையிலான போட்டியிலே இந்த சாதனை நிகழ்ந்தது.

முதலில் பேட்டிங் செய்த நார்த் ஜோன் அணி 405 ரன்கள் எடுத்தது. இதில் ஈஸ்ட் ஜோன் அணி சார்பாக விளையாடிய முஹம்மது சமி இரண்டாவது நாள் ஆட்டத்தில் ஆறு ஓவர்கள் வீசி இருந்தாலும், அதிக அளவு ரன்களை விட்டுக் கொடுத்தார். மேலும் நேற்று முதல் விக்கெட்டை வீழ்த்தியவர், இன்று விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை.

Duleep Trophy 2025

முகேஷ் குமார் 14.5 ஓவர் வீசி 5 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அவரும் எந்த விக்கெட்டும் கைப்பற்றவில்லை.இந்த நிலையில் ஈஸ்ட் ஸோன் அணி பேட்டிங் செய்தபோது அக்யூப் நபி அபாரமாக பந்து வீசி கடும் நெருக்கடியை கொடுத்தார். 10 புள்ளி1 ஓவர் வீசி அவர் வெறும் 28 ரன்களையே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

குறிப்பாக ஆட்டத்தின் 52 ஆவது ஓவரில் ஐந்தாவது பந்து மற்றும் கடைசி பந்தில் விக்கெட்டுகளை அவர் வீழ்த்திய பின் மீண்டும் 54 வது ஓவரின் முதல் பந்தில் விக்கெட் எடுத்து சாதனையை பூர்த்தி செய்தார்.இதை போன்று ஹர்ஷித் ராணா 14 ஓவர் வீசி 56 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைக்காத ஆர்ஸ்தீப் 17 ஓவர் வீசி 51 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்தார்.

இதன் மூலம் ஈஸ்ட் ஸோன் அணி 232 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 28 வயதான அக்யூப் நபி இதுவரை 29 போட்டிகளில் விளையாடி 90 முதல் தர விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.வலது கை வேகப்பந்துவீச்சாளான அக்யூப் நபிக்கு இந்திய அணியில் விரைவில் இடம் தர வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதைப் போன்று மற்றொரு ஆட்டத்தில் சென்ட்ரல் ஜோன் அணியும் நார்த் ஈஸ்ட் ஜோன் அணியும் விளையாடியது. இதில் சென்ட்ரல் ஜோன் அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 532 ரன்கள் எடுத்தது. இதன் அடுத்து களமிறங்கிய நார்த் ஈஸ்ட் ஜோன் அணி 65 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் விளையாடியது. இதில் சென்ட்ரல் ஜோன் அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 532 ரன்கள் எடுத்தது. இதன் அடுத்து களமிறங்கிய நார்த் ஈஸிட் ஜோன் அணி 65 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்திருக்கிறது.

Story first published: Friday, August 29, 2025, 20:01 [IST]
Other articles published on Aug 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+