Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

துலீப் கோப்பை பைனல்.. ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் அதிரடி சதம்.. சென்ட்ரல் சோன் அபார ஆட்டம்

மும்பை: துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிச்சுற்று சென்ட்ரல் சோன் அணியில் கேப்டன் ரஜத் பட்டிதார் அபாரமாக விளையாடி 112 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். பெங்களூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சென்ட்ரல் சோன் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனை அடுத்து களமிறங்கிய சவுத் சோன் அணியில் முதல் இன்னிங்ஸில் அந்த அணி 149 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் அகர்வால் 31 ரன்கள் சேர்த்தார். இதனை அடுத்து களமிறங்கிய சென்ட்ரல் சோன் அணியில் தொடக்க வீரர் டானிஷ் மாலேவர் மற்றும் அக்ஷய் வத்கர் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

Duleep Trophy 2025

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்தது. அக்ஷய் வத்க்கர் 22 ரன்களிலும் மூன்றாவது வீரராக களம் இறங்க சுபம்சர்மா 6 ரன்களிலும் ஆட்டம் இழக்க டேனிஷ் மலேவர் 120 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். இந்த நிலையில் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரஜத் பட்டிதார் மற்றும் யாஸ் ரதோத் ஆகியோர் அபாரமாக விளையாடி சென்ட்ரல் சோன் அணியின் இன்னிங்சை கட்டமைத்தனர்.

இருவரும் அடுத்தடுத்து சதம் விளாசினர். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய ரஜத் பட்டிதார் 115 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார். இதில் 12 பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். இதேபோன்று யாஷ் ரத்தோட் ஆட்டம் இழக்காமல் 188 பந்துகளில் 137 ரன்கள் சேர்த்தார். இறுதியில் சரான்ஸ் ஜெயின் 47 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

இரண்டாவது நாள் ஆட்டநேரம் முடிவில் சென்ட்ரல் ஜோன் அணி ஐந்து விக்கெட் இழ்ப்பிற்கு 384 ரன்கள் எடுத்திருக்கிறது. இது சௌத் சோன் அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 235 ரன்கள் கூடுதல் ஆகும். அணியின் சிஎஸ்கே வீரர் குர்ஜாப்னீத் சிங் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்னும் மூன்று நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் சென்ட்ரல் ஜோன் அணி இன்னிங்ஸ் வெற்றியை எதிர்நோக்கி உள்ளது.
நடப்பு துலீப் கோப்பை தொடரில் ரஜத் பட்டிதார் மூன்று சதம் அடித்திருப்பதால், வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, September 12, 2025, 19:37 [IST]
Other articles published on Sep 12, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+