Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் அபாரம்.. துலீப் கோப்பையில் இரட்டை சதத்தை நெருங்குகிறார்.. வெஸ்ட் அணி அபாரம்

மும்பை: துலீப் கோப்பை தொடரின் அரையிறுதி சுற்று தற்போது பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இந்த சுற்றில் வெஸ்ட் ஜோன் மற்றும் சென்ட்ரல் ஜோன் அணி பலப்பரிட்சை நடத்தி வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் ஜோன் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது வருகிறது.

வெஸ்ட் சோன் அணியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சிஎஸ்கே அணி கேப்டனான ருதுராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றுனனர். இதில் தொடக்க வீரராக களம் இறங்கிய ஜெய்ஸ்வால் வெறும் நான்கு ரன்களில் கலீல் அகமது பந்துவீசில் எல்பிடபிள்யூ ஆனார்.

Ruturaj Gaikwad

இதில் தொடக்க வீரராக களம் இறங்கிய ஜெய்ஸ்வால் வெறும் நான்கு ரன்களில் கலீல் அகமத்தின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதேபோன்று மற்றொரு தொடக்க வீரரான ஹர்விக் தேசாய் ஒரு ரன்னில் தீபச்சாகர் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். இதேபோன்று மூன்றாவது வீரராக களம் இறங்கிய ஆரிய தேசாய் 84 பந்துகளை எதிர்கொண்டு 39 ரன்கள் சேர்த்தார்.

இந்த தருணத்தில் ருதுராஜ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி நிதானமாக விளையாடியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் அதிரடியாக ஆடி 28 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து கலீல் அகமது பந்துவீச்சில் போல்ட் ஆனார். எனினும் மறுமுனையில் அபாரமாக விளையாடிய சிஎஸ்கே வீரர் ருதுராஜ், ரன் குவிப்பில் ஈடுபட்டார். ருத்ராஜின் விக்கெட்டை வீழ்த்துவதற்கு சென்ட்ரல் ஜோன் பந்துவீச்சாளர்கள் தடுமாறினர்.

மற்ற வீரர்கள் எல்லாம் நிலைத்து நிற்க தவறிய நிலையில் ருதுராஜ் அதிரடி காட்டினார். தற்போது ருதுராஜ் 187 பந்துகளை எதிர் கொண்டு 173 ரன்கள் சேர்த்து இருக்கிறார். இதில் 24 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். இதன் மூலம் 69 ஓவர் முடிவில் வெஸ்ட் ஸோன் ஹரி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்து இருக்கிறது.

இதனால் ருதுராஜ் இரட்டை சதத்தை அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் இடம் கிடைக்காத நிலையில் தற்போது ருதுராஜ், துலீப் கோப்பையில் அபாரமாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ருதுராஜ்க்கு இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Thursday, September 4, 2025, 16:28 [IST]
Other articles published on Sep 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+