Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

துலீப் கோப்பையில் ஸ்ரேயாஸ், ருதுராஜ்-க்கு ஏமாற்றம்.. ஆர்சிபி கேப்டனுக்கு அடிச்ச லக்.. இதை பாருங்க

மும்பை: துலீப் கோப்பை தொடருக்கான அரையிறுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்ற முடிந்து இருக்கின்றது இதில் சர்துல் தாக்கூர் தலைமையிலான வெஸ்ட் சோன் அணியில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ், பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஆகியோர் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர்.

இதில் ஆர்சி பி அணி கேப்டன் ரஜத் பட்டிதார் தலைமையிலான சென்ட்ரல் சோன் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ருதுராஜ் 184 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் தடுமாறினர். இதனால் வெஸ்ட் ஸோன் அணி 438 ரன்கள் எடுத்தது.

Duleep Trophy 2025

இதனை அடுத்து சென்ட்ரல் சோன் அணியில் யாருமே சதம் அடிக்கவில்லை என்றாலும், ஆறு வீரர்கள் அரை சதம் அடித்து இருந்தார்கள்.இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 600 ரன்கள் எட்டியது. இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் வெஸ்ட் சோன் அணி களம் இறங்கியது.

இது ஜெய்ஸ்வால் 64 ரன்களும், ருதுராஜ் 16 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 12 ரன்கள் எடுக்க அந்த அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் முதலில் அதிக ஸ்கோர் எடுத்த காரணமாக சென்ட்ரல் சோன் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது.

இதேபோன்று நார்த் சோன், சவுத் சோன் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் சௌத் சோன் அணி முதலில் அதிக ஸ்கோர் அடித்ததன் காரணமாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது. சவுத் அணியில் தமிழக வீரன் நாராயண ஜெகதீசன் முதல் இன்னிங்சில் 197 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது துலீப் கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரும் செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் சௌத் ஜோன் அணி வெற்றி பெறுமா இல்லை சென்ட்ரல் ஜோன் அணி வெற்றி பெறுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Sunday, September 7, 2025, 18:39 [IST]
Other articles published on Sep 7, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+