Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

துலீப் டிராபி பைனல்.. பாலோ ஆன் தவிர்க்க திலக் வர்மா அணி போராட்டம்.. கிழக்கு மண்டலம் ஆதிக்கம்

சென்னை: 2026 துலீப் டிராபி இறுதிப் போட்டியின் 3-வது நாள் ஆட்ட நேர முடிவில், தென் மண்டல அணி தனது முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. கிழக்கு மண்டல அணி முதல் இன்னிங்ஸில் 708 ரன்கள் குவித்த நிலையில், தென் மண்டல அணி இன்னும் 473 ரன்கள் பின் தங்கியுள்ளது.

முன்னதாக முதல் இன்னிங்சில் இஷான் கிஷன் 270 ரன்கள், குமார் குஷாக்ரா 101 ரன்கள் குவித்ததை அடுத்து கிழக்கு மண்டல அணி 708 ரன்கள் குவித்தது. அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் மண்டல அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளித்தது. துவக்க வீரர் ரிக்கி புய் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் ஜெகதீசன் 32 ரன்களுக்கும், ஷேக் ரஷீத் 27 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர்.

Duleep Trophy 2026 Final South Zone Captain Tilak Varma Fights Back East Zone on Day 3 in Chennai

நன்கு விளையாடிய தேவ்தத் படிக்கல் 62 ரன்கள் எடுத்திருந்தபோது முகேஷ் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஸ்மரன் ரவிச்சந்திரனும் 23 ரன்களுக்கு விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதனால் தென் மண்டல அணி 176 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பாலோ-ஆன் தவிர்க்கப் போராடிக் கொண்டிருந்தது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஜோடி சேர்ந்த கேப்டன் திலக் வர்மா மற்றும் ஸ்ரேயாஸ் கோபால் ஜோடி விக்கெட் விழாமல் தடுத்தனர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா தனது அரைசதத்தை நிறைவு செய்தார். 3-வது நாள் ஆட்ட முடிவில் தென் மண்டல அணி 5 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்துள்ளது. திலக் வர்மா 53 ரன்களுடனும், ஸ்ரேயாஸ் கோபால் 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். கிழக்கு மண்டல பந்துவீச்சில் ஷமி மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

"அவர் இருக்கும் வரை பாகிஸ்தான் டீம் உருப்படாது..".. கிழித்து தொங்கவிட்ட ஆஸ்திரேலிய வீரர் கில்லெஸ்பி

யார் வெற்றி பெற வாய்ப்பு?

இந்தப் போட்டியின் தற்போதைய நிலவரப்படி கிழக்கு மண்டல அணியே வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. தென் மண்டல அணி பாலோ-ஆனைத் தவிர்க்க இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. ஒருவேளை இந்தப் போட்டி டிராவில் முடிந்தால் கூட, முதல் இன்னிங்சில் முன்னிலை பெறும் கிழக்கு மண்டல அணியே சாம்பியனாக அறிவிக்கப்படும். இதனால் இந்த இறுதிப் போட்டியில் இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டல அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, September 8, 2026, 17:24 [IST]
Other articles published on Sep 8, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+