மும்பை: 2024 துலீப் ட்ராபி உள்ளூர் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன் முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருந்த வீரர்கள் பலரும் விலகி உள்ளனர். அவர்கள் அனைவரும் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ளனர். அதனால், துலீப் ட்ராபியில் இருந்து விலகினர்.
இந்திய அணியில் இடம் பெற்று துலீப் ட்ராபியில் இருந்து விலகிய வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை பிசிசிஐ அறிவித்து இருக்கிறது. இந்தியா ஏ அணியில் இடம் பெற்று இருந்த கேப்டன் சுப்மன் கில், கே எல் ராகுல், துருவ் ஜுரல், குல்தீப் யாதவ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகிய ஐந்து வீரர்கள் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருப்பதால் தொடரில் இருந்து விலகினர். அவர்களுக்கு பதிலாக பிராப்தம் சிங், அக்ஷய் வாத்கர், எஸ் கே ரஷீத், சாம்ஸ் முலனி மற்றும் ஆகிப் கான் ஆகிய ஐவரும் அறிவிக்கப்பட்டனர். இந்தியா ஏ அணிக்கு மயங்க் அகர்வால் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

அடுத்து இந்தியா பி அணியில் இடம் பெற்று இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றதால் அவர்கள் இருவரும் துலீப் ட்ராபியில் இருந்து விலகினர். அவர்களுக்கு பதிலாக சுயாஸ் பிரபுதேசாய் மற்றும் ரிங்கு சிங் அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர். முன்னதாக ரிங்கு சிங்கிற்கு ஏன் துலீப் ட்ராப் அணிகளில் இடம் அளிக்கப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்திருந்தது. தற்போது இந்திய அணியை தேர்வு செய்துவிட்ட நிலையில், தேர்வு குழு ரிங்கு சிங்கை துலீப் ட்ராபி தொடரில் சேர்த்து உள்ளது.
அடுத்து இந்தியா டி அணியில் இடம்பெற்று இருந்த அக்சர் பட்டேலுக்கு பதிலாக நிஷாந்த் சிந்து அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இந்தியா டி அணியில் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்கிறார். அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா சி அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. துலீப் ட்ராபி தொடரில் அணிமாற்றம் செய்யப்பட்ட பின் இந்தியா ஏ இந்தியா பி மற்றும் இந்தியா டி அணிகளின் விவரம் : -
இந்தியா ஏ அணி விவரம் : மயங்க் அகர்வால் (கேப்டன்), ரியான் பராக், திலக் வர்மா, சிவம் துபே, தனுஷ் கோட்டியான், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, அவேஷ் கான், குமார் குஷாக்ரா, ஷாஸ்வத் ராவத், பிரத்தம் சிங், அக்ஷய் வாட்கர், எஸ்கே ரஷீத், ஷாம்ஸ் முலானி, ஆகிப் கான்
இந்தியா பி அணி விவரம் : அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), சர்ஃபராஸ் கான், முஷீர் கான், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, முகேஷ் குமார், ராகுல் சாஹர், ஆர் சாய் கிஷோர், மோஹித் அவஸ்தி, நாராயணன் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), சுயாஷ் பிரபுதேசாய், ரிங்கு சிங், ஹிமான்ஷு மந்திரி (விக்கெட் கீப்பர்)
இந்தியா டி அணி விவரம் : ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அதர்வா டைடே, யாஷ் துபே, தேவ்தத் படிக்கல், ரிக்கி புய், சரண்ஷ் ஜெயின், அர்ஷ்தீப் சிங், ஆதித்யா தாக்கரே, ஹர்ஷித் ராணா, ஆகாஷ் சென்குப்தா, கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), சவுரப் குமார், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), நிஷாந்த் சிந்து, வித்வத் கவேரப்பா