Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

துலீப் டிராபி: கோப்பையை வென்ற இந்தியா ஏ.. அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் யார்? முழு விவரம்!

பெங்களூர்: துலீப் டிராபி தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணியை வீழ்த்தி மயங்க் அகர்வால் தலைமையிலான இந்தியா ஏ அணி கோப்பையை வென்றுள்ளது. இந்த நிலையில் அதிக ரன்கள் விளாசிய டாப் 5 வீரர்கள், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 5 வீரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.

துலீப் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா சி அணியை வீழ்த்தி இந்தியா ஏ அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. 350 ரன்களை சேஸிங் செய்த இந்தியா சி அணி கடைசி நாள் ஆட்டத்தில் 217 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அதிகபட்சமாக இந்தியா சி அணி சார்பாக ஆடிய தமிழக வீரர் சாய் சுதர்சன் 111 ரன்களை விளாசினார்.

duleep trophy 2024 ruturaj gaikwad sai sudharsan

இந்திய அணி சார்பாக பிரசித் கிருஷ்ணா மற்றும் தனுஷ் கோட்டியான் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்பின் இந்தியா ஏ அணியின் கேப்டன் மயங்க் அகர்வாலிடம் துலீப் டிராபி கோப்பை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியா ஏ அணியின் வீரர்களான திலக் வர்மா, ரியான் பராக் உள்ளிட்டோர் டான்ஸ் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில் துலீப் டிராபி தொடரில் சிறப்பாக ஆடி ரன்களை குவித்த டாப் 5 பேட்ஸ்மேன்கள் யார் என்று பார்க்கலாம். இதில் அதிகபட்சமாக இந்தியா டி அணிக்காக 3 போட்டிகளில் விளையாடிய இளம் வீரர் ரிக்கி பூய் 2 சதங்கள், ஒரு அரைசதம் உட்பட 359 ரன்களை விளாசியுள்ளார். அதேபோல் இந்தியா பி அணியின் கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் 5 இன்னிங்ஸ்களில் 2 சதங்கள் உட்பட 309 ரன்களை விளாசி 2வது இடத்தில் இருக்கிறார்.

தொடர்ந்து இந்தியா சி அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஏ அணி வெற்றிபெற காரணமாக அமைந்த இளம் வீரர் ஷஷ்வத் ராவத் 4 இன்னிங்ஸ்களில் விளையாடி ஒரு சதம், 2 அரைசதங்கள் உட்பட 259 ரன்களை விளாசி 3வது இடத்தில் இருக்கிறார். அதேபோல் இந்தியா சி அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 6 இன்னிங்ஸ்களில் 2 அரைசதங்கள் உட்பட 232 ரன்களை சேர்த்து 4வது இடத்தில் உள்ளார்.

duleep trophy 2024 ruturaj gaikwad sai sudharsan

இவர்களுக்கு பின் தமிழக வீரர் சாய் சுதர்சன் 6 இன்னிங்ஸ்களில் ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 202 ரன்களை சேர்த்து 5வது இடத்தில் உள்ளார். அதேபோல் டாப் 5 பவுலர்களில் இந்தியா சி அணிக்காக ஆடிய அன்சுல் கம்போஜ் 3 இன்னிங்ஸ்களில் விளையாடி 16 விக்கெட்டுகளை சாய்த்து முதலிடத்தில் இருக்கிறார்.

இவருக்கு பின் இந்தியா பி அணியில் விளையாடிய முகேஷ் குமார் 3 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை சாய்த்து 2வது இடத்தில் இருக்கிறார். தொடர்ந்து நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி 3 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி 3வது இடத்திலும், நட்சத்திர வீரர் அர்ஷ்தீப் சிங் 3 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளையும், தனுஷ் கோட்டியான், வைஷாக் விஜயகுமார் மற்றும் மானத சுதர் ஆகியோர் 3 போட்டிகளில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

Story first published: Sunday, September 22, 2024, 21:17 [IST]
Other articles published on Sep 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+