Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்களை நீக்கியது தவறு தான்.. சீக்கிரம் புறப்பட்டு வாங்க.. சாம்சனுக்கு கடைசி நேரத்தில் வந்த வாய்ப்பு

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் எப்போதுமே சஞ்சு சாம்சனுக்கு பெரிய வாய்ப்பு வந்ததே கிடையாது. சஞ்சு சாம்சனுக்கு கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகப் போகிறது. ஆனால் அவர் ஒரு 50 போட்டியில் கூட இந்தியாவுக்காக விளையாடியது கிடையாது.

இப்படி சூழல் இருக்கு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்தாலும், அதனை அவர் சமீப காலமாக சரியாக பயன்படுத்துவதும் கிடையாது. இந்த நிலையில் சஞ்சு சாம்சன் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு மட்டும் தான் சரிப்பட்டு வருவார் என்று தேர்வுக்குழு தவறான ஒரு கணக்கை போட்டுவிட்டனர். ஆனால் சஞ்சு சாம்சன் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடக்கூடியவர்.

duleep trophy 2024 shubman gill sanju samson

29 வயதான சஞ்சு சாம்சன் முதல் தர டெஸ்ட் போட்டிகளில் 62 ஆட்டங்களில் விளையாடி 3623 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 38.54 ஆகும். இதில் பத்து சதமும், 16 அரை சதமும் அடங்கும். அதிகபட்சமாக 211 ரன்கள் அடித்திருக்கிறார். ஆனால் சாம்சன் பெரிய அளவில் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதற்கு மாறாக பண்ட், கிஷன்,பரத்,ஜூரல் போன்ற விக்கெட் கீப்பர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெஸ்ட் சீசனுக்கு வீரர்களை தேர்வு செய்யும் விதமாக துலீப் கோப்பையில் ஸ்டார் வீரர்களை தேர்வு செய்தது. இதில் அனைத்து விக்கெட் கீப்பர்களும் தேர்வாணர்கள். ஆனால் இதில் கூட சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை. இந்த நிலையில் தான் தன்னுடைய பார்மை நிரூபித்து இந்திய டெஸ்ட் அணியில் கிஷன் இடம் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் இசான் கிஷணுகு திடீரென்று காயம் ஏற்பட்டு இருப்பதால், அவர் விலகி இருக்கிறார். இதனை அடுத்து ஸ்ரேயாஸ் தலைமையிலான இந்திய டீ அணியில் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் இடம் பிடித்திருக்கிறார். இருப்பினும் இந்திய டி அணியில் ஏற்கனவே கே எஸ் பரத் இருப்பதால் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதேபோன்று இந்தியா ஏ அணியின் இடம் பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவும் முழு உடல் தகுதியை எட்டவில்லை.

இதனால் அவரும் துலீப் கோப்பை தொடரின் முதல் சுற்றில் இருந்து வெளியேறி இருக்கிறார்.ஆல் ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி முழு உடல் தகுதியை எட்டியதை எடுத்து அவர் விளையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதேபோன்று முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் இடம்பெற மாட்டார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஏற்கனவே முகமது சிராஜ், உம்ரான் மாலிக் போன்ற வீரர்கள் துலீப் கோப்பையில் இருந்து விலகி இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்திய பி அணையில் இருந்து ஜடேஜா கடைசி நேரத்தில் விலகி இருக்கிறார். இதனால் எந்த திட்டத்திற்காக இந்த தொடர் நடத்தப்படுகிறதோ அது பலன் இல்லாமல் போய்விட்டது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Story first published: Thursday, September 5, 2024, 7:31 [IST]
Other articles published on Sep 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+